சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் மரணம் தொடர்பில் நிறுவனம் ஒன்றுக்கு S$210,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பார்க்கர் சாலையில் உள்ள ஆங்கிலோ-சீனப் பள்ளி (ACS) வளாகத்திற்குள் உள்ள வேலையிடத்தில் 2019 நவ. 22 அன்று நடந்த சம்பவத்தில் வெளிநாட்டு கட்டுமான ஊழியர் காயமடைந்து பின்னர் இறந்தார்.
ரங்கூன் சாலை உள்ளிட்ட இடங்களில் பிடிபட்ட 17 வாகன ஓட்டுநர்கள்
வேலையிடத்தில் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் செங்கற்கள் ஊழியர் மீது விழுந்து அவரின் தலையை தாக்கியது.
இதில் 38 வயதான ஹோசின் ரிப்பன் என்ற அந்த பங்களாதேஷ் ஊழியர், தலையில் ஏற்பட்ட காயத்தால் இரண்டு நாட்களுக்குப் பிறகு இறந்தார்.
இந்நிலையில், பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டிய கட்டுமான நிறுவனம் தனது கடமையைச் செய்யத் தவறியதாக HP கட்டுமானம் மற்றும் பொறியியல் (HPC) நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அதாவது, நேற்று ஆக.26 அன்று வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின் கீழ், வேலையிடத்தில் அனைவருக்கும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யத் தவறியதற்காக அந்நிறுவனத்துக்கு S$210,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த சம்பவம் நடந்த நேரத்தில் HPC நிறுவனத்தின் திட்ட மேலாளராகப் பணிபுரிந்த திரு. வோங் ஃபாங் யிஹ் என்பவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“சம்பளம் முறையா வரல” – கட்டுமானத் துறை வெளிநாட்டு ஊழியர்களிடம் அதிகரித்த புகார்
சம்பவம் நடந்தபோது அவர் தனியாக இருந்துள்ளார், அப்போது கடிகார கோபுரத்தின் முகப்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் செங்கற்கள் ஊழியரை தாக்கின.
சத்தம் கேட்டு அவரது சக ஊழியர்கள் விரைந்து சென்று பார்த்தபோது, திரு. ஹோசின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி புதைந்து கிடந்துள்ளார்.
பின்னர் அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

