Last Updated:
Shikhar Dhawan | ஷிகர் தவான் தனது புதிய காதலியை குறித்து நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக அறிவித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது புதிய காதலியை குறித்து வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் இதற்கு முன்னர் ஆயிஷா முகர்ஜி என்பவரை மணந்தார். இதையடுத்து, கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடந்தது. சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசிய தவான், தன் மகனை பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே நடந்துமுடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின், இந்தியா – வங்கதேச போட்டியின்போது ஷிகர் தவான் ஒரு பெண்ணுடன் போட்டியை கண்டு களித்தார். அந்த பெண் யார் என்று இணையவாசிகள் தேட ஆரம்பித்தனர். இன்னும் சிலர், ஷிகர் தவான் மீண்டும் காதலில் ஈடுபட்டுள்ளாரென தெரிவித்து வந்தனர். அந்த பெண் அயர்லாந்தைச் சேர்ந்த சோஃபி ஷைன் என இணையவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஷிகர் தவானிடம், மீண்டும் காதலிக்க தயாராக இருக்கிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “நான் எப்போதும் காதலில் தான் இருக்கிறேன்” என நகைச்சுவையாக பதிலளித்தார் தவான். இதையடுத்து, அவர் யார் என்று கூறுங்கள் என கேட்கப்பட்டபோது, சற்று தயங்கிய ஷிகர் தவான், “நான் எந்தப் பெயரையும் குறிப்பிட மாட்டேன். ஆனால் இந்த அறையில் இருக்கும் அழகிய பெண் தான் என்னுடைய காதலி” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “காதலில் நான் அனுபவமின்மையால் தவறான தேர்வுகளை செய்தேன், ஆனால் இப்போது அனுபவம் உள்ளது,” என்றார்.
இதையும் படிக்க: வெற்றிப் பாதைக்கு சிஎஸ்கே திரும்ப என்ன செய்ய வேண்டும்?
ஷிகர் தவான் விவாகரத்து சம்பவம் நடைபெற்ற பின்னர், அவர் தனது 11 வயது மகனை பராமரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு ஆயிஷா எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, அவர் மகனுடன் வீடியோ காலில் மட்டும் பேச தவானுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
April 03, 2025 1:16 PM IST