• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இங்கிலாந்தை ஊதித்தள்ளிய ரோகித் படை.. 10 ஆண்டுகளுக்கு பின் இறுதிப் போட்டியில் இந்திய அணி! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 29, 2024
in மலேசியா
Reading Time: 4 mins read
0
இங்கிலாந்தை ஊதித்தள்ளிய ரோகித் படை.. 10 ஆண்டுகளுக்கு பின் இறுதிப் போட்டியில் இந்திய அணி! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டி20 உலகக்கோப்பையில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் கயானாவில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி தொடங்குமா இல்லையா என்ற நிலை தொடக்கத்தில் இருந்தது. இருப்பினும் போட்டி தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பந்துவீச்சு தேர்வு செய்ய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஒரு சிக்ஸர் விளாசி நம்பிக்கை கொடுத்த விராட் கோலி உடனடியாகவே 9 ரன்களில் நடையைக் கட்டினார்.

நடப்பு உலகக்கோப்பையில் மீண்டும் ஒரு சொதப்பலான ஆட்டத்தை அவர் ஆடினார். அவரை தொடர்ந்து வந்த ரிஷப் பண்ட்டும் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

அதிரடியில் மிரட்டிய ரோகித், சூர்ய குமார்!

8 ஓவர்களில் 65 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டத்தில் மீண்டும் மழை குறுக்கிட்டது. மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டு அரை மணி நேரம் கழித்து மீண்டும் தொடங்கியது. ரோகித் சர்மாவும், சூர்ய குமார் யாதவும் அதிரடியில் பட்டையை கிளப்பினர். சிக்ஸர்களையும் விளாசினர். பந்துகள் அடிக்க சிரமமாக இருந்தாலும் ரன் ரேட் குறையாமல் பார்த்துக் கொண்டனர்.

36 பந்துகளில் அரைசதம் விளாசினார் ரோகித் சர்மா. தொடர்ந்து அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 சிக்ஸர், 6 பவுண்ரிகளுடன் 57 ரன்களில் ஆட்டமிழந்தார் ரோகித் சர்மா. அவரை தொடர்ந்து அதிரடியின் நம்பிக்கையாக இருந்த சூர்ய குமார் யாதவ் 47 ரன்னில் அரைசதத்தை நழுவ விட்டு ஆட்டமிழந்தார். களத்தில் பார்மில் இருந்த இருவீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர்.

துணைக் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி 2 சிக்ஸர்கள் விளாசி 23 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார் ஷிவம் துபே. ஜடேஜா 17*, அக்‌ஷர் 10 ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

தொடக்கத்தில் மிரட்டிய பட்லர்!

172 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பட்லர் மற்றும் சால்ட் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அர்ஸ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் 5 ரன்களும், பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட 8 ரன்களும் எடுக்கப்பட்டன. அர்ஸ்தீப் வீசிய 3வது ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசினார் பட்லர். மீண்டும் 2022 போல் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து சேஸ் செய்துவிடுமோ என்ற எண்ணம் ஒரு நிமிடம் அனைவருக்கும் வந்து சென்றது.

வியக்க வைத்த குல்தீப் பவுலிங்! 103 ரன்னில் சாய்ந்த இங்கிலாந்து!

அக்ஸர் பட்டேல் டர்ன் முடிந்த உடன் குல்தீப் விக்கெட் டேக்கிங்கை கையிலெடுத்தார். ப்ரூக், சாம் கர்ரன், ஜோர்தன் ஆகிய மூவரது விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்தார். அதன்பிறகு அடுத்தடுத்து இரண்டு ரன் அவுட் ஆனது. இறுதி விக்கெட்டை பும்ரா சாய்த்தார். 16.4 ஓவரில் இங்கிலாந்து அணி 103 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஜூன் 27 ஆம் தேதி (நாளை) இரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் தென்னாப்ரிக்க அணியுடன் மோதுகிறது.

10 ஆண்டுகளுக்கு பின் இறுதிப்போட்டியில் இந்திய அணி!

அக்ஸர் பட்டேல் டர்ன் முடிந்த உடன் குல்தீப் விக்கெட் டேக்கிங்கை கையிலெடுத்தார். ப்ரூக், சாம் கர்ரன், ஜோர்தன் ஆகிய மூவரது விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்தார். அதன்பிறகு அடுத்தடுத்து இரண்டு ரன் அவுட் ஆனது. இறுதி விக்கெட்டை பும்ரா சாய்த்தார். 16.4 ஓவரில் இங்கிலாந்து அணி 103 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஜூன் 27 ஆம் தேதி (நாளை) இரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் தென்னாப்ரிக்க அணியுடன் மோதுகிறது.

Previous articleஉட்லண்ட்ஸ்-ஜோகூர் பாலத்தின் 100 ஆண்டு நிறைவு – சிங்கப்பூருக்கு கேக் வழங்கிய BSI துணைத்தலைவர் விமலா ராமலிங்கம்



Read More

Previous Post

மீண்டும் அதிரடியாக அதிகரித்த தங்கம் விலை… நகை பிரியர்கள் அதிர்ச்சி ! – News18 தமிழ்

Next Post

சிங்கப்பூரில் வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்து!! சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்!!

Next Post
சிங்கப்பூரில் வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்து!! சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்!!

சிங்கப்பூரில் வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்து!! சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin