Last Updated:
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ராவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ராவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து செல்லும் இந்திய அணி 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டி20 தொடருக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் தொடருக்கான அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, விராட் கோலி, அக்ஷர் படேல், ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
காயத்தால் அவதிப்படும் கோலி, குணமடைந்தால் மட்டுமே தொடரில் விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷ்ரேயஸ் ஐயர் துணை கேப்டனாக உள்ள அணியில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், இஷான் கிஷன் ஆகிய பேட்ஸ்மேன்களும் வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி ஆகிய ஆல் ரவுண்டர்களும் இடம்பெற்றுள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், குர்னூர் ப்ராரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனிடையே காயம் குணமடையாததால், அயர்லாந்து எதிரான டி20 தொடருக்கு சேர்க்கப்பட்டிருந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், கடைசியாக விளையாடிய 3 ஒருநாள் போட்டிகளில் 2 சதங்கள் விளாசிய ஜெய்ஸ்வால், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இடம்பெறவில்லை. இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால், 71.25 சராசரியுடன் 285 ரன்கள் அடித்துள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


