• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்.. முதல் நாளிலேயே தவறிழைத்த சுப்மன் கில்… தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு

GenevaTimes by GenevaTimes
June 21, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்.. முதல் நாளிலேயே தவறிழைத்த சுப்மன் கில்… தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 21, 2025 3:33 PM IST

வேண்டுமென்றே தான் அதனை செய்யவில்லை என்பதை கில் நிரூபித்தால் இந்த தண்டனை தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது.

சுப்மன் கில்சுப்மன் கில்
சுப்மன் கில்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் ஐசிசி விதிகளை மீறியுள்ளார். இதனால் அவருக்கு தண்டனை வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

அதையடுத்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீரராக விளையாடிய கே.எல். ராகுல் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்  101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சுப்மன் 127 ரன்கள் குவித்துள்ளார். ரிஷப் பந்த் 65 ரன்கள் சேர்க்க, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது.

வலுவான நிலையில் இந்திய அணி உள்ள சூழலில், நேற்றைய ஆட்டத்தின் போது ஐசிசி விதிகளை மீறியதாக கேப்டன் சுப்மன் கில் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடைகளுக்கான ஐசிசி விதிகளின்படி வெள்ளை அல்லது கிரீம் அல்லது லேசான சாம்பல் நிறம் ஆகிய வண்ணங்களில் மட்டுமே சாக்ஸ் அணிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நேற்றைய ஆட்டத்தில் கருப்பு நிற சாக்ஸ் சுப்மன் கில் அணிந்து விளையாடினார். இது ஐசிசி விதிகளை மீறிய செயல் என்பதால், அவருக்கு போட்டி ஊதியத்திலிருந்து இருந்து 20% வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் வேண்டுமென்றே தான் அதனை செய்யவில்லை என்பதை கில் நிரூபித்தால் இந்த தண்டனை தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

June 21, 2025 3:33 PM IST

Read More

Previous Post

ஜார்க்கண்ட் கனமழையால் ஒடிசாவில் வெள்ளம்! 50,000 பேர் பாதிப்பு!

Next Post

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்… ஈரான் முக்கிய தளபதி கொலை… தீவிரமடையும் போர்

Next Post
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்… ஈரான் முக்கிய தளபதி கொலை… தீவிரமடையும் போர்

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்... ஈரான் முக்கிய தளபதி கொலை... தீவிரமடையும் போர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin