Last Updated:
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் விலகி உள்ளார். இது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்திய இங்கிலாந்து அணி 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
அதைத்தொடர்ந்து நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடர் தோல்வியைத் தவிர்க்க முடியும். இதனால் இந்திய வீரர்கள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு தீவிர முயற்சி மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மூட்டில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார். இதையடுத்து சிகிச்சைக்காக அவர் விரைவில் இந்தியா திரும்ப உள்ளார்.
இதேபோன்று வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்று கூறப்படுவதால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படக்கூடும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், KL ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ்
July 21, 2025 1:13 PM IST


