அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இக்வானுல் முஸ்லிமின் அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக (FTO) வகைப்படுத்தும் செயல்முறையைத் தொடங்கும் நோக்கத்துடன், ஓர் உத்தரவை (எக்ஸிக்யூட்டிவ் ஆர்டர்) கையெழுத்திட்டார். இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள தோழமை நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கும் முக்கியமான விடயமாகக் கருதப்படுகிறது.
அரசியல் மற்றும் மத இயக்கங்களின் பெயரில் வன்முறையை ஊக்குவிக்கும் அமைப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவசியத்தை உலக நாடுகள்
குறிப்பிட்டு வருகின்றன. எனவே இக்குழுவின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து, அதன் சொத்துக்களை பறிமுதல் செய்தல் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளன என்றார் அவர்,
இந்நிலையில் லெபனான், எகிப்து, ஜோர்டானில் உள்ள இக்வானுல் முஸ்லிமின் அமைப்பின் பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. “இந்த உத்தரவு, இக்வானுல் முஸ்லிமின் சில பிரிவுகள் அல்லது பகுதிகளை FTO-ஆக வகைப்படுத்துவதற்கான செயல்முறையை ஏற்படுத்துகிறது” என்று உத்தரவு தெரிவிக்கிறது.
இந்த முடிவுக்கு காரணமாக, 2023 அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு, லெபனானின் இக்வானுல் முஸ்லிமின் அமைப்பின் ராணுவப் பிரிவு ஹமாஸ், ஹெஸ்புல்லாவுடன் இணைந்து இஸ்ரேலுக்கு ராக்கெட் தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடப்படுகிறது.
The post இக்வானுல் முஸ்லிமின் அமைப்பை தீவிரவாதக் குழுவாக அறிவிப்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

