Last Updated:
அவருக்கு கடந்த மாதம் 35 வயது ஆன நிலையில் மீண்டும் அவர் அணிக்கு திரும்புவதில் சாத்தியங்கள் குறைவாக உள்ளதாக கருதப்படுகிறது.
வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் (ODI) தொடருக்கான அணியில் இடம்பெறாத நிலையில், அவர் மீண்டும் தேசிய அணிக்குத் திரும்புவது கடினமாகி வருவதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் (குறிப்பாக துலீப் டிராபி போட்டியில் ஷமியின் ஆட்டம் அணி செலக்டர்களின் கவனத்தை பெறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவருக்கு கடந்த மாதம் 35 வயது ஆன நிலையில் மீண்டும் அவர் அணிக்கு திரும்புவதில் சாத்தியங்கள் குறைவாக உள்ளதாக கருதப்படுகிறது.
காயப் பிரச்சினைகளிலிருந்து மீண்டிருந்தாலும், அவரது வேகத்தில் பழைய செயல்பாடு இல்லை என்றும், இதனால் தேர்வாளர்களின் முதல் தேர்வாக அவர் இல்லை என்றும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில், இந்த நேரத்தில், ஷமி இந்திய அணிக்குத் திரும்புவது மிகவும் கடினமாகி வருகிறது. துலீப் போட்டியிலும், ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் தவிர, அவர் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. மேலும், அவருக்கு வயது அதிகமாகி வருகிறது. துலீப் போட்டியில் அவரது வேகமும் சிறப்பாக இல்லை. ஆனால் ஐபிஎல்-லில் தொடர்ந்து விளையாட அவர் போதுமான உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
தேசிய அணியில் வாய்ப்புக் குறைந்துள்ள நிலையில், ஷமி தனது மாநில அணியான பெங்கால் அணிக்காக ரஞ்சி டிராபிப் போட்டியில் விளையாடச் சம்மதம் தெரிவித்துள்ளார். அந்த அணி வரும் 15 ஆம் தேதி தனது முதல் போட்டியில் உத்தரகாண்டை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் உத்தரகாண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க ஷமி முயற்சி எடுப்பாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
October 08, 2025 10:25 PM IST


