Last Updated:
ஆஸ்திரேலியாவில் கொடூர தாக்குதல் நடத்தி 15 பேரை கொன்ற தந்தை-மகன் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், இந்தியாவுடன் தொடர்பில்லை, ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு என டிஜிபி தகவல்.
ஆஸ்திரேலியாவில் கொடூர தாக்குதல் நடத்தி 15 பேரை கொன்ற தந்தை-மகன் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தெலங்கானா டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், சஜித் அக்ரம் ஐதராபாத்தில் பி.காம் படித்ததாகவும், 1998-ஆம் ஆண்டு வேலைக்காக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர், ஐரோப்பிய பூர்வீகத்தைக் கொண்ட வெனிரா என்ற பெண்ணை திருமணம் செய்ததன் மூலம் நவீத் அக்ரம் மற்றும் மற்றொரு பெண் குழந்தை பிறந்ததாகவும், சஜித் அக்ரம் தற்போது வரை இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பதாகவும், ஆஸ்திரேலியாவில் பிறந்ததால் அவரது மகன் நவீத் அக்ரம் ஆஸ்திரேலிய குடிமகனாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
சஜித் அக்ரம் தனது உறவினர்களுடன் தொடர்பில் இருந்ததில்லை எனவும், அவரது தந்தையின் மறைவுக்கு கூட இந்தியாவுக்கு வரவில்லை எனவும், கடந்த 27 ஆண்டுகளில் 6 முறை மட்டுமே சஜித் அக்ரம் இந்தியா வந்திருப்பதாகவும், கடைசியாக 2022-ஆம் ஆண்டு வந்ததாகவும் தெலங்கானா டிஜிபி தெரிவித்துள்ளார்.
50 வயதான சஜித் அக்ரம், 24 வயதான அவரது மகன் நவீத் அக்ரமுக்கு இந்தியாவுடன் எந்த தொடர்பும் இல்லை எனவும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்து இந்த தீவிரவாத செயலில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hyderabad,Hyderabad,Telangana
December 17, 2025 7:32 AM IST
ஆஸ்திரேலிய துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை-மகனுக்கு பூர்வீகம் இந்தியா… அதிர்ச்சி தகவல்!


