• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் 2026… 16-வது முறையாக கால் இறுதியில் ஜோகோவிச்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 25, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஆஸ்திரேலிய ஓபன் 2026… 16-வது முறையாக கால் இறுதியில் ஜோகோவிச்! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 25, 2026 7:59 PM IST

ஆண்கள் 4வது சுற்று ஆட்டத்தில், உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள ஜோகோவிச், சக நாட்டவரான ஜேக்கப் மென்சிக்கை எதிர்கொள்ள இருந்தார்.

News18
News18

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், 16வது முறையாக கால் இறுதிக்கு முன்னேறி, செர்பிய வீரர் ஜோகோவிச் சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், 16வது முறையாக கால் இறுதிக்கு முன்னேறி, செர்பிய வீரர் ஜோகோவிச் சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில், ஆண்டின் முதலாவது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் 4வது சுற்று ஆட்டத்தில், உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள ஜோகோவிச், சக நாட்டவரான ஜேக்கப் மென்சிக்கை எதிர்கொள்ள இருந்தார். காயம் காரணமாக மென்சிக் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், ஜோகோவிச் கால் இறுதிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் 15 முறை ஆஸ்திரேலிய ஓபன் தொடரில், கால் இறுதிக்கு முன்னேறி இருந்த ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரரின் சாதனையை முறியடித்தார். இதற்கு முந்தைய மூன்றாவது சுற்றில் போடிக் வான் டி சான்ட்ஷுல்ப்பை வீழ்த்தியதன் மூலம், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 400 வெற்றிகளைப் பதிவு செய்த முதல் வீரர் என்ற இமாலய சாதனையை ஜோகோவிச் படைத்தார்.

38 வயதான ஜோகோவிச், கடந்த 49 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபன் கால் இறுதிக்கு முன்னேறிய மிக வயதான வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதே தொடரின் முதல் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம், ஆஸ்திரேலிய ஓபனில் மட்டும் தனது 100-வது வெற்றியை அவர் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது கால் இறுதிக்கு முன்னேறியுள்ள ஜோகோவிச், தனது 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற மார்கரெட் கோர்ட்டின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் உள்ளார். கால் இறுதியில் அவர் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் அல்லது இத்தாலியின் லாரென்சோ முசெட்டியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, உலகின் நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் அல்கராஸ், 3வது நிலையில் உள்ள ஜெர்மனியின் அலெக்ஸ்சாண்ட் ஸ்வரேவ் ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறினர். அதேநேரத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த மூத்த வீரர் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் லெர்னர் டைனிடம் 4வது சுற்றில் தோல்வியடைந்தார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

Read More

Previous Post

Tamilmirror Online || தங்கச் சங்கிலியுடன் ஓடியவர் சிக்கினார்

Next Post

தப்பியோடிய விசாரணைக் கைதி: பினாங்கு போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை!

Next Post
தப்பியோடிய விசாரணைக் கைதி: பினாங்கு போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை!

தப்பியோடிய விசாரணைக் கைதி: பினாங்கு போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin