Last Updated:
காலிறுதியில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் அல்கராஸ், உள்ளூரை சேர்ந்த அலெக்ஸ் டி மினாருடன் பலப்பரீட்சை நடத்தினார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் அரையிறுதி சுற்றுக்கு உலகின் நம்பர் ஒன் வீரரான கார்லஸ் அல்கராஸ் மற்றும் அலெக்சாண்டர் ஸ்வரேவ் தகுதி பெற்றனர்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில் நடந்த முதலாவது காலிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் லெர்னர் டியனை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே வெற்றிக்காக இருவரும் மல்லுக்கட்டினர். இருப்பினும், 6-க்கு 3, 6-க்கு 7, 6-க்கு 1, 7-க்கு 6 என்ற செட் கணக்கில் ஸ்வரேவ் வெற்றி வாகை சூடி அரை இறுதிக்கு முன்னேறினார்.
தொடர்ந்து நடந்த மற்றொரு காலிறுதியில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் அல்கராஸ், உள்ளூரை சேர்ந்த அலெக்ஸ் டி மினாருடன் பலப்பரீட்சை நடத்தினார்.
Jan 27, 2026 10:13 PM IST


