• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: கால் இறுதிக்கு ஜோகோவிச், அல்கராஸ் முன்னேற்றம் | Australian Open Grand Slam Djokovic Alcaraz advance to quarterfinals

GenevaTimes by GenevaTimes
January 20, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: கால் இறுதிக்கு ஜோகோவிச், அல்கராஸ் முன்னேற்றம் | Australian Open Grand Slam Djokovic Alcaraz advance to quarterfinals
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிச் சுற்றில் விளையாட ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், அமெரிக்க வீராங்கனைகள் கோ கோ கவுஃப், நடப்புச் சாம்பியன் அரினா சபலென்கா(பெலாரஸ்) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 4-வது சுற்றுப் போட்டியில் 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ், பிரிட்டன் வீரர் ஜேக் டிராப்பருடன் மோதினார். இதில் அல்காரஸ் 7-5, 6-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, டிராப்பர் ஆட்டத்திலிருந்து விலகினார். இதையடுத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அல்கராஸ் கால் இறுதிக்குத் தகுதி பெற்றார்.

மற்றொரு 4-வது சுற்றுப் போட்டியில், டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சும், செக் குடியரசு வீரர் ஜிரி லெஹக்காவும் மோதினர். இதில் ஜோகோவிச் 6-3, 6-4, 7-6(4) என்ற நேர் செட்களில் ஜிரி லெஹக்காவை வீழ்த்தி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

பெடரர் சாதனை சமன்: மேலும், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் 15 முறை கால் இறுதிக்கு முன்னேறி, சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாதனையை சமன் செய்தார் ஜோகோவிச்.

மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீரர் டாமி பால் 6-1, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் டேவிடோவிச் ஃபோகினாவை வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 6-1, 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் உகோ ஹும்பர்ட்டை தோற்கடித்தார்.

சபலென்கா அபாரம்: மகளிர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான அரினா சபலென்கா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் ரஷ்ய வீராங்கனையும், 14-ம் நிலை வீராங்கனையுமான மிர்ரா ஆன்ட்ரீவாவையும் வீழ்த்தினார். 3-ம் நிலை வீராங்கனையான கோகோ கவுஃப் 5-7, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக்கைச் சாய்த்தார்.

மற்ற ஆட்டங்களில் பவுலா படோ (ஸ்பெயின்) 6-1, 7-6 (2) என்ற செட் கணக்கில் செர்பியாவின் ஓல்கா டேனிலோவிக்கையும், ரஷ்யாவின் அனஸ்டாசியா பாவ்லியுசென்கோவா 7-6 (0), 6-0 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் டோனா வெகிக்கையும் சாய்த்தனர்.

போபண்ணா ஜோடி தகுதி: கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, சீனாவின் ஜாங் ஷுவாய் ஜோடி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது.

நேற்று நடைபெற இருந்த 3-வது சுற்றில் ரோஹன் போபண்ணா, ஜாங் ஷுவாய் ஜோடியானது, அமெரிக்காவின் டெய்லர் டவுன் சென்ட், மொனாக்கோவின் ஹுகோ நியிஸ் ஜோடியை எதிர்த்து விளையாட இருந்தது. ஆனால் போட்டியிலிருந்து டெய்லர்-ஹுகோ ஜோடி விலகிக் கொண்டது. இதையடுத்து கால் இறுதிச் சுற்றுக்கு போபண்ணா, ஜாங் ஷுவாய் ஜோடி முன்னேறியுள்ளது.



Read More

Previous Post

மா்ம காய்ச்சல் உயிரிழப்பு 17-ஆக உயா்வு: ரஜௌரி விரைந்த மத்திய குழு

Next Post

Ambani: அமெரிக்க அதிபராக ட்ரம்ப்; தொடக்க விழாவில் அம்பானி குடும்பம்! – வைரலாகும் புகைப்படம்! | Ambani family attended the Trump dinner in the america

Next Post
Ambani: அமெரிக்க அதிபராக ட்ரம்ப்; தொடக்க விழாவில் அம்பானி குடும்பம்! – வைரலாகும் புகைப்படம்! | Ambani family attended the Trump dinner in the america

Ambani: அமெரிக்க அதிபராக ட்ரம்ப்; தொடக்க விழாவில் அம்பானி குடும்பம்! - வைரலாகும் புகைப்படம்! | Ambani family attended the Trump dinner in the america

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin