• Login
Saturday, June 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆஸ்திரேலியாவை ‘நாக் அவுட்’ சுற்றில் இந்தியா வீழ்த்தியது எப்படி? | India vs Australia full match was explained

GenevaTimes by GenevaTimes
March 5, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஆஸ்திரேலியாவை ‘நாக் அவுட்’ சுற்றில் இந்தியா வீழ்த்தியது எப்படி? | India vs Australia full match was explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


துபாய்: ஐசிசி சாம்​பியன்ஸ் டிராபி கிரிக்​கெட் தொடரின் அரை இறுதி ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலிய அணியை 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது இந்​திய அணி. துபா​யில் நேற்று நடை​பெற்ற அரை இறுதி ஆட்​டத்​தில் டாஸ் வென்று ஆஸ்​திரேலிய அணி பேட்​டிங் செய்​தது. அந்த அணி​யில் மேத்யூ ஷார்ட், ஸ்பென்​சர் ஜான்​சன் ஆகியோ​ருக்கு பதிலாக கூப்​பர் கானொலி, தன்​வீர் சங்கா ஆகியோர் சேர்க்​கப்​பட்​டனர்.

ஆட்​டத்​தின் முதல் பந்தை இந்​தி​யா​வின் முகமது ஷமி வைடாக வீசி​னார். இதற்கு மாற்​றாக வீசப்​பட்ட பந்தை ஆஸ்​திரேலிய அணி​யின் டிரா​விஸ் ஹட் லெக் திசை​யில் அடிக்க முயன்​றார். ஆனால் பந்து அவரது மட்​டை​யில் பட்டு ஷமியை நோக்கி வந்​தது. அதை வலது கையால் ஷமி பிடிக்க முயன்ற போது நழுவி கீழே விழுந்​தது.

இதனால் ஹெட் டக்-அவுட் ஆவதில் இருந்து தப்​பித்​தார். முதல் இரு ஓவர்​களில் ஆஸ்​திரேலிய அணி 3 ரன்​கள் மட்​டுமே சேர்த்​திருந்​தது. ஷமி வீசிய அடுத்த ஓவரில் ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் கூப்​பர் கானொலி, கே.எல்​.​ராகுலிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார் இந்த ஓவரில் ஒரு ரன் மட்​டுமே சேர்க்​கப்​பட்​டிருந்​தது. இதையடுத்து கேப்​டன் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்க டிரா​விஸ் ஹெட் மட்​டையை சுழற்​றி​னார்.

ஹர்​திக் பாண்​டியா வீசிய 4-வது ஓவரில் பவுண்​டரி, சிக்​ஸர் பறக்​க​விட்ட டிரா​விஸ் ஹெட்,’ முகமது ஷமி வீசிய அடுத்த ஓவரில் தொடர்ச்​சி​யாக 3 பவுண்​டரி​களை விரட்டி அசத்​தி​னார். தொடர்ந்து குல்​தீப் யாதவ் வீசிய 8-வது ஓவரில் நேர் திசை​யில் சிக்​ஸர் விளாசி​னார்.

அதிரடி​யாக விளை​யாடிய டிரா​விஸ் ஹெட் 33 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 39 ரன்​கள் எடுத்த நிலை​யில் வருண் சக்​ர​வர்த்தி பந்தை சிக்​ஸருக்கு அடிக்க முயன்ற போது லாங் ஆஃப் திசை​யில் ஷுப்​மன் கில்​லிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து களமிறங்​கிய மார்​னஷ் லபுஷேன் 36 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 29 ரன்​களும் ஜோஷ் இங்​லிஷ் 12 பந்​துகளில் 11 ரன்​களும் எடுத்த நிலை​யில் ரவீந்​திர ஜடேஜா பந்​தில் ஆட்​ட​மிழந்​தனர்.

27 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 144 ரன்​கள் என்ற நிலை​யில் ஸ்டீவ் ஸ்மித்​துடன், இணைந்த அலெக்ஸ் கேரி அற்​புத​மாக விளை​யாடி​னார். நிதான​மாக விளை​யாடி தனது 35-வது அரை சதத்தை கடந்த ஸ்டீவ் ஸ்மித் 96 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 4 பவுண்​டரி​களு​டன் 73 ரன்​கள் எடுத்த நிலை​யில் முகமது ஷமி வீசிய தாழ்​வான ஃபுல்​டாஸில் போல்​டா​னார்.

இதையடுத்து களமிறங்​கிய கிளென் மேக்​ஸ்வெல் 7 ரன்​னில் அக்​சர் படேல் பந்​தில் போல்​டா​னார். பென் ட்வார்​ஷுய்ஸ் 19 ரன்​களில் வருண் சக்​கர​வர்த்தி பந்​தில் வெளி​யேறி​னார். தனது 12-வது அரை சதத்தை நிறைவு செய்த அலெக்ஸ் கேரி 57 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 8 பவுண்​டரி​களு​டன் 61 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரன் அவுட் ஆனார்.

தொடர்ந்து நேதன் எலிஸ் 10 ரன்​னில் முகமது ஷமி பந்​தி​லும், ஆடம் ஸாம்பா 7 ரன்​னில் ஹர்​திக் பாண்​டியா பந்​தி​லும் நடையை கட்ட ஆஸ்​திரேலிய அணி 49.3 ஓவர்​களில் 264 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இந்​திய அணி தரப்​பில் முகமது ஷமி 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். வருண் சக்​ர​வர்த்​தி, ரவீந்​திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை​யும் கைப்​பற்​றினர்.

265 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​திய அணிக்கு ரோஹித் சர்மா வழக்​கம் போல் அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். அதேவேளை​யில் நிதான​மாக விளை​யாடிய ஷுப்​மன் கில் 11 பந்​தில் 8 ரன்​கள் எடுத்த நிலை​யில் பென் ட்வார்​ஷுய்ஸ் ஆஃப் ஸ்டெம்​புக்கு வெளியே வீசிய பந்தை கால்​கள் நகர்வு இல்​லாமல் விளை​யாடிய போது போல்​டா​னார்.

அதிரடி​யாக விளை​யாடிய ரோஹித் சர்மா 29 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 28 ரன்​கள் எடுத்த நிலை​யில் கூப்​பர் கானொலி பந்தை விளாச முயன்​ற​போது எல்​பிடபிள்யூ ஆனார். 7.5 ஓவர்​களில் 43 ரன்​களுக்கு 2 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் விராட் கோலி​யுடன் இணைந்த ஸ்ரேயஸ் ஐயர் பார்ட்​னர்​ஷிப்பை கட்​டமைத்​தார். இதனால் இந்​திய அணி 19.4 ஓவரில் 100 ரன்​களை கடந்​தது. விராட் கோலி 53 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் அரை சதம் கடந்​தார்.

நிதான​மாக விளை​யாடிய ஸ்ரேயஸ் ஐயர் 62 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 45 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஆடம் ஸாம்பா பந்​தில் போல்​டா​னார். விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி 3-வது விக்​கெட்​டுக்கு 111 பந்​துகளில் 91 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து அக்​சர் படேல் களமிறங்​கி​னார். விராட் கோலி 51 ரன்​களில் இருந்த போது கூப்​பர் கானொலி வீசிய பந்தை லாங் ஆன் திசையில் அடித்தார். அப்​போது கிளென் மேக்​ஸ்​வெல் டைவ் அடித்து ஒற்றை கையால் பிடிக்க முயன்​றார். ஆனால் பந்து நழு​வியது.

அதிரடி​யாக விளை​யாட முயன்ற அக்​சர் படேல் 30 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 27 ரன்​கள் எடுத்த நிலை​யில் நேதன் எலிஸ் பந்​தில் ஆஃப் ஸ்டெம்பை பறி​கொடுத்​தார். இதைத் தொடர்ந்து கே.எல்​.​ராகுல் களமிறங்​கி​னார். இந்​திய அணி 40 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 200 ரன்​கள் சேர்த்​தது. கடைசி 10 ஓவர்​களில் அணி​யின் வெற்​றிக்கு 65 ரன்​கள் தேவை​யாக இருந்​தன.

தன்​வீர் சங்கா வீசிய 41-வது ஓவரில் 8 ரன்​களும், பென் ட்வார்​ஷுய்ஸ் வீசிய அடுத்த ஓவரில் 9 ரன்​களும் சேர்க்​கப்​பட்​டன. ஆடம் ஸாம்பா வீசிய 43-வது ஓவரில் கே.எல்​.​ராகுல் மிட் ஆன் திசை​யில் சிக்​ஸர் விளாசி​னார். இதே ஓவரின் 4-வது பந்தை விராட் கோலி லாங் ஆன் திசை​யில் விளாசிய போது பென் ட்வார்​ஷுய்​ஸிடம் கேட்ச் ஆனது.

விராட் கோலி 98 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 84 ரன்​கள் சேர்த்​தார். அப்​போது வெற்​றிக்கு 44 பந்​துகளில் 41 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. இதையடுத்து ஹர்​திக் பாண்​டியா களமிறங்​கி​னார். 44-வது ஓவரை வீசிய நேதன் எலிஸ் 3 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்​தார். தன்​வீர் சங்கா வீசிய அடுத்த ஓவரில் ஹர்​திக் பாண்​டியா சிக்​ஸர் பறக்​க​விட்​டார். இதனால் 5 ஓவர்​களில் 28 ரன்​கள் தேவை என்ற நிலை உரு​வானது.

46-வது ஓவரை வீசிய நேதன் எலிஸ் ஒரு ரன்னை மட்​டுமே வழங்க இந்​திய அணிக்கு அழுத்​தம் அதி​கரித்​தது. ஆனால் ஆடம் ஸாம்பா வீசிய அடுத்த ஓவரின் கடைசி இரு பந்​துகளை ஹர்​திக் பாண்​டியா சிக்​ஸர்​களுக்கு பறக்​க​விட்டு மிரளச் செய்​தார். இதனால் 18 பந்​துகளில் 12 ரன்​கள் தேவை என அழுத்​தம் குறைந்​தது.

நேதன் எலிஸ் வீசிய 48-வது ஓவரின் 3-வது பந்தை பவுண்​டரிக்கு விரட்​டிய ஹர்​திக் பாண்​டியா 5-வது பந்தை சிக்​ஸருக்கு விளாச முயன்ற போது லாங் ஆன் திசை​யில் கிளென் மேக்​ஸ்​வெல்​லிடம் கேட்ச் ஆனது. ஹர்​திக் பாண்​டியா 24 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 28 ரன்​கள் சேர்த்​தார்.

அப்​போது வெற்​றிக்கு 6 ரன்​களே தேவை​யாக இருந்​தன. மேக்​ஸ்​வெல் வீசிய 49-வது ஓவரின் முதல் பந்தை கே.எல்​.​ராகுல் லாங் ஆன் திசை​யில் சிக்​ஸர் விளாசி அசத்​தி​னார். முடி​வில் இந்​திய அணி 48.1 ஓவரில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 267 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. கே.எல்​.​ராகுல் 34 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 42 ரன்​களும் ரவீந்​திர ஜடேஜா 2 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது. ஆஸ்​திரேலிய அணி தரப்​பில் நேதன் எலிஸ், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். ஐசிசி தொடரின் நாக் அவுட் சுற்​றில் ஆஸ்​திரேலி​யாவை இந்​திய அணி 14 வருடங்​களுக்​குப் பிறகு தற்​போது​தான் வீழ்த்​தி​யுள்​ளது. கடைசி​யாக கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் கால் இறுதி ஆட்​டத்​தில் அந்த அணியை இந்​தியா வென்றிருந்தது.

கருப்பு பட்டை: ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ராக சாம்​பியன்ஸ் டிராபி அரை​யிறு​தி​யில் இந்​திய அணி வீரர்​கள் கருப்பு பட்டை அணிந்து விளை​யாடி​னார்​கள். உள்​நாட்டு கிரிக்​கெட் ஜாம்​ப​வான் பத்​மாகர் ஷிவல்​கரின் மறைவையொட்டி அவருக்கு அஞ்​சலி செலுத்​தும் வகை​யில் இந்​திய அணி வீரர்​கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளை​யாடினர்.

ஹெட்டை காலி செய்த வருண்: சாம்​பியன்ஸ் டிராபி​யில் இந்​தி​யா​வுக்கு எதி​ரான அரை இறுதி ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலிய அணி​யின் அதிரடி தொடக்க வீர​ரான டிரா​விஸ் ஹெட், வருண் சக்​ர​வர்த்தி வீசிய 9-வது ஓவரில் ஆட்​ட​மிழந்​தார். டிரா​விஸ் ஹெட்டை பவர்​பிளே ஓவர்​களில் சுழற்​பந்து வீச்​சாளர் ஆட்​ட​மிழக்​கச் செய்​துள்​ளது இதுவே முதன்​முறை​யாகும்​.

2 முறை தப்பித்த ரோஹித்: ரோஹித் சர்மா 13 ரன்​களில் இருந்த போது நேதன் எலிஸ் வீசிய பந்​தில் பாயின்ட் திசை​யில் கொடுத்த கேட்ச்சை கூப்​பர் கானொலி தவற​விட்​டார். தொடர்ந்து 15 ரன்​களில் இருந்த போது பென் ட்வார்​ஷுய்ஸ் வீசிய பந்​தில் மிட் ஆன் திசை​யில் கடின​மான கேட்ச்சை மார்​னஷ் லபுஷேன் பிடிக்​கத் தவறி​னார். ஆனால் இந்த இரு வாய்ப்​பு​களை​யும் ரோஹித் சர்மா சரி​யாக பயன்​படுத்​திக் கொள்ளவில்லை.​

பிடி மன்னனில் 2-வது இடம்: சாம்​பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ரான அரை இறுதி ஆட்​டத்​தில் விராட் கோலி 2 கேட்​ச்​கள் செய்​தார். இதன் மூலம் சர்​வதேச ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டிகளில் அதிக கேட்​ச்​கள் செய்​தவர்​களின் பட்​டியலில் 2-வது இடத்​துக்கு முன்​னேறி​னார் விராட் கோலி. இதுவரை அவர் 161 கேட்​ச்​கள் செய்​துள்​ளார். இந்த வகை​யில் இலங்​கை​யின் மகேலா ஜெயவர்​த்​தனே (218) முதலிடத்​தில் உள்​ளார். ஆஸ்​திரேலி​யா​வின் ரிக்கி பாண்​டிங் (160) 3-வது இடம் வகிக்​கிறார்.

இன்றைய ஆட்டம்

2-வது அரை இறுதி

தென் ஆப்பிரிக்கா – நியூஸிலாந்து

நேரம்:
பிற்பகல் 2.30,

இடம்: லாகூர்

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்



Read More

Previous Post

LIVE: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

Next Post

Gold Rate : ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… இன்றை விலை

Next Post
Gold Rate : ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… இன்றை விலை

Gold Rate : ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்றை விலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin