• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆஸ்திரேலியாவுடன் 4-வது டி20-ல் இன்று மோதல்: வெற்றி முனைப்புடன் களமிறங்கும் இந்திய அணி | team india to play in fourth t20i match with australia

GenevaTimes by GenevaTimes
November 6, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஆஸ்திரேலியாவுடன் 4-வது டி20-ல் இன்று மோதல்: வெற்றி முனைப்புடன் களமிறங்கும் இந்திய அணி | team india to play in fourth t20i match with australia
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கர்ராரா: இந்​தியா – ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான 4-வது டி 20 கிரிக்​கெட் போட்டி கோல்ட் கோஸ்ட் நகரில் உள்ள கர்​ராரா ஓவல் மைதானத்​தில் இன்று நடை​பெறுகிறது.

சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் முதல் போட்டி மழை காரண​மாக கைவிடப்​பட்​டது. 2-வது ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலிய அணி 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. ஹோபர்ட்​டில் நடை​பெற்ற 3-வது ஆட்​டத்​தில் இந்​திய அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்​தது.

டி20 தொடர் 1-1 என சமநிலை​யில் இருக்​கும் நிலை​யில் கோஸ்ட் நகரில் உள்ள கர்​ராரா ஓவல் மைதானத்​தில் இன்று பிற்​பகலில் நடை​பெறும் 4-வது ஆட்​டத்​தில் இரு அணி​களும் மீண்​டும் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன. முதல் இரு போட்​டிகளி​லும் பந்​து​வீச்​சில் அச்​சுறுத்​தல் கொடுத்த ஆஸ்​திரேலிய அணி​யின் ஜோஷ் ஹேசில்​வுட் கடந்த ஆட்​டத்​தில் இருந்து வில​கி​னார். இது அந்த அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்​படுத்​தி​யிருந்​தது. ஏனெனில் 186 ரன்​களை குவித்​திருந்த போதி​லும் ஆஸ்​திரேலிய அணி​யால் வெற்​றியை வசப்​படுத்​தப்​படுத்த முடி​யாமல் போயி​யிருந்​தது.

இதுஒரு​புறம் இருக்க ஆஷஸ் தொடருக்கு தயா​ராகும் வித​மாக இன்று நடை​பெறும் டி 20 ஆட்​டத்​தி​லும், அடுத்த ஆட்​டத்​தில் இருந்​தும் அதிரடி பேட்​ஸ்​மே​னான டிரா​விஸ் ஹெட் வில​கி​யுள்​ளார். ஆஸ்​திரேலிய அணி​யின் இரு தூண்​களாக கருதப்​படும் ஜோஷ் ஹேசில்​வுட், டிரா​விஸ் ஹெட் ஆகியோர் இல்​லாத​தால் இன்​றைய ஆட்​டத்​தில் இந்​திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்​னிலை பெறு​வதற்​காக சிறந்த வாய்ப்பு உரு​வாகி உள்​ளது.

இன்​றைய ஆட்​டத்​தில் இந்​திய அணி வெற்றி பெறும் பட்​சத்​தில் தொடரை வெல்​வதற்​கான வாய்ப்பை தக்​க​வைத்​துக் கொள்​ளும். ஒரு​வேளை இன்று தோல்​வியை சந்​தித்​தால் கடைசி ஆட்​டத்​தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்​வதற்கோ அல்​லது தொடரை பறி​கொடுக்​காமல் இருப்​ப​தற்கோ போராட வேண்​டிய நிலை ஏற்​படும். 3-வது ஆட்​டத்​தில் வாஷிங்​டன் சுந்​தர் பேட்​டிங்​கில் 23 பந்​துகளில், 49 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்​கு​வகித்​திருந்​தார்.

அதேவேளை​யில் தொடக்க வீர​ரான ஷுப்​மன் கில், இந்த சுற்​றுப்​பயணத்​தில் ஒரு​நாள் போட்டி தொடர் உட்பட 6 ஆட்​டங்​களில் விளை​யாடிய போதி​லும் ஒரு முறை​கூட அரை சதத்தை எட்​ட​வில்​லை. அவர், முறையே 10, 9, 24, 37*, 5, 15 ரன்​களே எடுத்​துள்​ளார். இதனால் இன்​றைய ஆட்​டத்​தில் ஷுப்​மன் கில் ரன்​கள் குவிக்க வேண்​டிய நெருக்​கடி​யுடன் களமிறங்​கு​கிறார். மறு​புறம் மற்​றொரு தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா சிறந்த பார்​மில் உள்​ளார். அவரிடம் இருந்து மீண்​டும் ஒரு அதிரடி தொடக்​கம் அமையக்​கூடும். சூர்​யகு​மார் யாத​வும் ரன்​கள் குவிப்​ப​தில் கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும்.

பந்​து​வீச்​சில் கடந்த ஆட்​டத்​தில் அர்​ஷ்தீப் சிங் சிறப்​பாக செயல்​பட்​டிருந்​தார். அதேவேளை​யில் ஜஸ்​பிரீத் பும்ரா விக்​கெட் கைப்​பற்​றா​விட்​டாலும் ரன் குவிப்பை கட்​டுப்​படுத்​தி​யிருந்​தார். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்​படக்​கூடும். சுழலில் அக்​சர் படேல், வருண் சக்​ர​வர்த்​தி, வாஷிங்​டன் சுந்​தர் கூட்​டணி பலம் சேர்க்​கக்​கூடும்.

ஆஸ்​திரேலிய பேட்​டிங்​கில் மிட்​செல் மார்​ஷ், டிம் டேவிட், மார்​கஸ் ஸ்டா​யினிஸ் ஆகியோரை பெரிதும் சார்ந்​திருக்​கக்​கூடும். டிரா​விஸ் ஹெட் இல்​லாத​தால் மேத்யூ ஷார்ட் தொடக்க வீர​ராக களமிறங்க வாய்ப்பு உள்​ளது. பந்​து​வீச்​சில் கடந்த ஆட்​டத்​தில் சீன் அபோட் 3.3 ஓவர்​களில் 56 ரன்​களை தா​ரை​வார்த்​திருந்​தார். இதனால் இன்​றைய ஆட்​டத்​தில் அவருக்கு பதிலாக பென் டுவார்​ஷு​யிஸ் அல்​லது மஹ்லி பியர்​ட்​மேன்​ சேர்​க்​கப்​படக்​கூடும்​.



Read More

Previous Post

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தாய், ஆண் நண்பருக்கு 180 ஆண்டு சிறை தண்டனை: கேரள போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு | Kerala pocso court sentences mother, boyfriend to 180 years in prison for sexually assaulting minor girl

Next Post

தொடர் சரிவுக்கு பிறகு ஏற்றம்.. இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

Next Post
தொடர் சரிவுக்கு பிறகு ஏற்றம்.. இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தொடர் சரிவுக்கு பிறகு ஏற்றம்.. இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin