• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆஸ்​திரேலி​யா​வுடன் முதல் டி 20-ல் இன்று மோதல்: பார்​முக்கு திரும்​பும் முனைப்​பில் சூர்​யகு​மார் யாதவ் | Australia vs India: T20I series begins today

GenevaTimes by GenevaTimes
October 29, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஆஸ்​திரேலி​யா​வுடன் முதல் டி 20-ல் இன்று மோதல்: பார்​முக்கு திரும்​பும் முனைப்​பில் சூர்​யகு​மார் யாதவ் | Australia vs India: T20I series begins today
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கான்​பெரா: இந்​தியா – ஆஸ்​திரேலியா அணிகள் கான்​பெ​ரா​வில் உள்ள மனுகா ஓவல் மைதானத்​தில் இன்று பிற்​கல் 1.45 மணிக்கு முதல் டி 20 கிரிக்​கெட் போட்​டி​யில் மோதுகின்​றன.

இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் தொடரை ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய அணி 1-2 என இழந்​தது. இந்​நிலை​யில் இரு அணி​களும் 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் மோத உள்​ளன. இதன் முதல் ஆட்​டம் இன்று பிற்​பகல் 1.45 மணிக்கு கான்​பெ​ரா​வில் நடை​பெறுகிறது.

இந்​திய அணி சூர்​யகு​மார் யாதவ் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. அவரது தலை​மை​யில் இந்​திய அணி அச்​சமற்ற கிரிக்​கெட்டை விளை​யாடி வரு​கிறது. முதல் பந்​தில் இருந்தே அனைத்து பேட்​ஸ்​மேன்​களும் அதிரடி​யாக விளை​யாடும் திறனை வளர்த்​துக் கொண்​டுள்​ளனர். இதன் பலனாக சூர்​யகு​மார் யாதவ் கேப்​டன்​ஷிப்​பில் இந்​திய அணி 29 ஆட்​டங்​களில் 23 வெற்​றிகளை குவித்​துள்​ளது.

சூர்​யகு​மார் யாதவ் தலை​மை​யில் இந்​திய அணி இது​வரை இருதரப்பு டி 20 தொடரை இழந்​தது இல்​லை. கடைசி​யாக இந்​திய அணி ஆசிய கோப்பை டி 20 தொடரில் பட்​டம் வென்​றிருந்​தது. அந்​தத் தொடரில் இந்​திய அணி ஒரு ஆட்​டத்​தில் கூட தோல்​வியை சந்​திக்​க​வில்​லை. அடுத்த ஆண்டு தொடக்​கத்​தில் டி 20 உலகக் கோப்பை தொடர் நடை​பெற உள்​ளது. இந்த இடைப்​பட்ட காலத்​தில் இந்​திய அணி 15, டி 20 ஆட்​டங்​களில் விளை​யாட உள்​ளது. இதன் தொடக்​க​மாக தற்​போது ஆஸ்​திரேலி​யத் தொடர் அமைந்​துள்​ளது. இந்​தத் தொடர் டி 20 உலகக் கோப்​பைக்கு சிறந்த முறை​யில் தயா​ராகு​வதற்​கான சவாலை இந்​திய அணிக்கு கொடுக்​கக்​கூடும்.

எனினும் நடப்பு ஆண்​டில் சூர்​யகு​மார் யாத​வின் பேட்​டிங்​கில் பெரிய அளவில் தேக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. 2023-ம் ஆண்டு 18 இன்​னிங்​ஸ்​களில் விளை​யாடி 156 ஸ்ட்​ரைக் ரேட்​டுடன் 733 ரன்​களை குவித்து மிரட்​டி​யிருந்​தார் சூர்​யகு​மார் யாதவ். இதில் 2 சதங்​கள், 5 அரை சதங்​கள் அடங்​கும். தொடர்ந்து 2024-ம் ஆண்டு 151 ஸ்ட்​ரைக் ரேட்​டுடன் 450 ரன்​கள் சேர்த்​தார். ஆனால் நடப்​பாண்​டில் 10 இன்​னிங்​ஸ்​களில் விளை​யாடி 100 ரன்​கள் மட்​டுமே சேர்த்​துள்​ளார். சராசரி வெறும் 11 ஆக மட்​டுமே இருக்​கிறது.

எனினும் சூர்​யகு​மார் யாத​வின் ஸ்ட்​ரைக் ரேட் 105-க்கு மேல் உள்​ளது. இது அவர் ரன்​களுக்​காகப் போராடிய போதி​லும், தனது தாக்​குதல் நோக்​கத்தை முற்​றி​லு​மாக கைவிட​வில்லை என்​ப​தையே உணர்த்​துகிறது. ஆசி​யக் கோப்பை தொடரில் அதிரடி​யாக விளை​யாடி ரன்​வேட்டை நிகழ்த்​திய தொடக்க வீர​ரான அபிஷேக் சர்​மாவுக்​கு, ஆஸ்​திரேலிய ஆடு​களங்​களில் காணப்​படும் கூடு​தல் பவுன்ஸை சமாளிப்​பது சவாலாக இருக்​கக்​கூடும் என கருதப்​படு​கிறது.

இதனாலேயே சூர்​யகு​மார் யாத​வின் பங்​களிப்பு மிக​வும் முக்​கிய​மான​தாக பார்க்​கப்​படு​கிறது. பந்​தின் வேகம், பவுன்​ஸ்​களை பயன்​படுத்தி ஸ்டெம்​பு​களுக்கு பின்​னால் விளாசும் சூர்​யகு​மார் யாத​வின் ஷாட்​களுக்கு இம்​முறை பலன் கிடைக்​கக்​கூடும். ஏனெனில் போட்டி நடை​பெறும் கான்​பெரா மனுகா ஓவல் மைதானத்​தில் பந்​துகள் நன்கு பவுன்ஸ் ஆகும். எனினும் டெஸ்ட் போட்​டிக்​கான நீளத்​தில் பந்து வீசும் ஜோஷ் ஹேசில்​வுட் ஆஃப் ஸ்டெம்ப் திசைகளை குறி​வைத்து வீசி அழுத்​தம் கொடுக்​கக்​கூடும்.

பந்​து​வீச்​சில் ஜஸ்​பிரீத் பும்ரா பலம் சேர்க்​கக்​கூடும். அவருடன் சுழலில் வருண் சக்​ர​வர்த்​தி, குல்​தீப் யாதவ், அக்​சர் படேல் ஆகியோர் அதிரடி பேட்​ஸ்​மேன்​களான டிரா​விஸ் ஹெட், மிட்​செல் மார்​ஷுக்கு அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும். ஆஸ்​திரேலி​யா​வின் புதிய டி 20 நட்​சத்​திரமான மிட்​செல் ஓவன் மீது எதிர்​பார்ப்பு உள்​ளது. சமீபத்​தில் அடிலெய்​டில் நடை​பெற்ற ஒரு​நாள் போட்​டி​யில் இந்​தி​யா​வுக்கு எதி​ராக மிட்​செல் ஓவன் சிறப்​பாக செயல்​பட்​டிருந்​தார். ஆனால் இந்​திய அணி​யின் சுழற்​பந்து வீச்சு மிட்​செல் ஓவனின் அதிரடி பேட்​டிங் திறமையை நிச்​சய​மாக சோதிக்​கும்.

10-ல் 8 வெற்றி: சர்​வ​தேச டி 20 போட்​டிகளில் சமீப​கால​மாக இந்​தி​யா, ஆஸ்​திரேலியா அணி​கள் ஆதிக்​கம் செலுத்து வரு​கின்​றன. இரு அணி​களுமே தங்​களது கடைசி 10 டி 20 ஆட்​டங்​களில் தலா 8 வெற்​றிகளை பதிவு செய்​துள்​ளது. தலா ஒரு ஆட்​டத்​தில் தோல்வி அடைந்​துள்​ளன. ஆஸ்​திரேலிய அணி மோதிய ஒரு ஆட்​டம் மழை காரண​மாக கைவிடப்​பட்​டிருந்​தது. இந்​திய அணி மோதிய ஒரு ஆட்​டம் ‘டை’ ஆகி​யிருந்​தது.



Read More

Previous Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. அதிரடியாக உயரப்போகும் சம்பளம்!

Next Post

Gold Price Fall | நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை இன்னும் எவ்வளவு குறையும்? வெளியான தகவல்! | வணிகம்

Next Post
Gold Price Fall | நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை இன்னும் எவ்வளவு குறையும்? வெளியான தகவல்! | வணிகம்

Gold Price Fall | நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை இன்னும் எவ்வளவு குறையும்? வெளியான தகவல்! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin