உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறவுள்ள குரூப் 1 ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், வங்க தேசமும் மோதுகின்றன. இதில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும்.
உலகக்கோப்பை டி20 போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. லீக் சுற்றுகள் முடிந்து சூப்பர் 8 சுற்றில், 8 அணிகள் அரையிறுதிப் போட்டிக்காக மோதி வருகின்றன.
இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அமெரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் சூப்பர் 8ல் விளையாடுகின்றன. இதில் குரூப் 1 பிரிவில், ஆப்கன் அணியை ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறது. இந்த பிரிவில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்துள்ள நிலையில், நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால், ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறும் என்பது கவனிக்கத்தக்கது. 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில், ஆஸ்திரேலியாவிடம் ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி தோல்வியடைந்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. அந்த போட்டியில் வென்ற ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பையையும் கைப்பற்றியது என்பது கவனிக்கத்தக்கது.
ஆஸ்திரேலியா – ஆப்கன் அணிகள் மோதும் போட்டி செயின்ட் வின்சென்ட் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு ஆரம்பம் ஆகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)