Last Updated:
2027 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிசிசிஐ புதிய திட்டங்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியை முன்கூட்டியே தொடங்கியுள்ளார்.
இந்த தொடரில் அவர் கேப்டன்ஷிப் பொறுப்பில் இருப்பார் என்று தகவல்கள் தெரிகின்றன. இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை வென்ற பின்னர், ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தார். இதேபோன்று அறிவிப்பை விராட் கோலி வெளியிட்டிருந்தார்.
இருப்பினும், இம்மூத்த வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இருவரும் தங்களைத் தயார் படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, 2027 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிசிசிஐ புதிய திட்டங்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதன்படி ரோகித் சர்மாவும் விராட் கோலியும் உலக கோப்பை தொடருக்கு முன்னரே ஓய்வை அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-2 கணக்கில் சமன் செய்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
August 13, 2025 4:55 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்.. பயிற்சியை தொடங்கிய ரோஹித் சர்மா


