• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 190 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி | West Indies all out for 190 runs in Test match against Australia

GenevaTimes by GenevaTimes
June 27, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 190 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி | West Indies all out for 190 runs in Test match against Australia
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரிட்ஜ்டவுன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

3 டெஸ்ட், 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியானது மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 56.5 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 78 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 59 ரன்களும் உஸ்மான் கவாஜா 128 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்களும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 28 ரன்களும் சேர்த்தனர். சாம் கான்ஸ்டாஸ் 3, கேமரூன் கிரீன் 3, ஜோஷ் இங்லிஷ் 5, பியூ வெப்ஸ்டர் 11, அலெக்ஸ் கேரி 8, மிட்செல் ஸ்டார்க் 0, ஜோஷ் ஹேசில்வுட் 4 ரன்களில் நடையை கட்டினர். நேதன் லயன் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் ஜேய்டன் சீல்ஸ் 5, ஷமர் ஜோசப் 4 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்தது. கிரெய்க் பிராத்வெயிட் 4, ஜான் கேம்பல் 7, கீசி கார்ட்டி 20, ஜோமல் வாரிக்கன் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். பிரண்டன் கிங் 23, கேப்டன் ராஸ்டன் சேஸ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டத்தை மேற்கு இந்தியத் தீவுகள் அணி தொடர்ந்து விளையாடியது. கிங் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பேட் செய்ய வந்த ஷாய் ஹோப் உடன் இணைந்து 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் கேப்டன் சேஸ். 108 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து சேஸ் ஆட்டமிழந்தார். கிரீவ்ஸ் 4, ஹோப் 48, ஷமர் ஜோசப் 8, ஜேய்டன் சீல்ஸ் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அல்சாரி ஜோசப் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 63.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது மேற்கு இந்தியத் தீவுகள். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை காட்டிலும் 10 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஜோஷ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ், வெப்ஸ்டர் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். நேதன் லயன் 1 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் பேட் செய்தது.

2-ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் இந்தப் போட்டியில் 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது ஆஸி. கவாஜா 15, சாம் கான்ஸ்டாஸ் 5, இங்லிஷ் 12, கேமரூன் கிரீன் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

டிராவிஸ் ஹெட் 13 ரன்கள், வெப்ஸ்டர் 19 ரன்கள் உடன் களத்தில் உள்ளனர். மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் ஜேய்டன் சீல்ஸ், ஷமர் ஜோசப், அல்சாரி ஜோசப், கிரீவ்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.



Read More

Previous Post

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. அதில் பாஜக அங்கம் வகிக்கும் – அமித் ஷா

Next Post

யுஎஸ் ராணுவ தளத்தை குறிவைத்து கத்தார் மீது ஈரான் தாக்குதல்: சவுதி அரேபியா கண்டனம் | Saudi Arabia Condemns Iran

Next Post
யுஎஸ் ராணுவ தளத்தை குறிவைத்து கத்தார் மீது ஈரான் தாக்குதல்: சவுதி அரேபியா கண்டனம் | Saudi Arabia Condemns Iran

யுஎஸ் ராணுவ தளத்தை குறிவைத்து கத்தார் மீது ஈரான் தாக்குதல்: சவுதி அரேபியா கண்டனம் | Saudi Arabia Condemns Iran

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin