ஆஸ்திரேலியாவில் சுமார் 65 கங்காருக்கள் சட்டவிரோதமாக கொல்லப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவைகள் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் அல்லது வாகனம் மோதி கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கங்காருக்கள் மெல்போர்னில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தொலைதூரப் பகுதியில் வாழ்கின்றன.
அவற்றில் மூன்று கங்காருக்கள் உயிருடன் இருந்தன.
ஆனால் அவை பலத்த காயம் அடைந்ததால் கருணைக்கொலை செய்யப்பட்டன.
இரண்டு கங்காரு குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
வனவிலங்கு சரணாலயத்தில் குட்டிகள் பராமரிக்கப்படுகின்றன.

&w=1200&resize=1200,675&ssl=1)