Last Updated:
டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இரு முறையும் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது; Brian Bennett 64 ரன்கள், மேட் ரென்ஷா 65 ரன்கள், 23 ரன்கள் வித்தியாசம்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை இரண்டு முறை ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட ஜிம்பாப்வே அணி, இரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கொழும்பு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி இரண்டே விக்கெட்களை இழந்து 169 ரன்களை எடுத்தது. குறிப்பாக, தொடக்க ஆட்டக்காரர் Brian Bennett கடைசிவரை ஆட்டமிழக்காமல் 64 ரன்களை குவித்திருந்தார்.
தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியின் மேட் ரென்ஷா மட்டும் நிலையாக விளையாடி 65 ரன்களை எடுத்தார். கடைசி ஓவரில் 146 ரன்கள் எடுத்திருந்த போது அந்த அணி ஆல் அவுட்டானது.
இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்த அணிகள் நேருக்கு நேர் மோதின. அதிலும் ஜிம்பாப்வே அணியே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை 100% வெற்றி கண்ட ஒரே அணியாக ஜிம்பாப்வே சாதனை படைத்திருக்கிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


