• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆஸி. – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல் | AUS vs SA, 3rd T20I

GenevaTimes by GenevaTimes
August 16, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஆஸி. – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல் | AUS vs SA, 3rd T20I
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கெய்ன்ஸ்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் டார்வினில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

இளம் அதிரடி பேட்ஸ்மேனான டெவால்ட் பிரேவிஸ் 56 பந்துகளில், 125 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார். டி 20 தொடர் 1-1 என சமநிலையில் இருக்கும் நிலையில் இரு அணிகளும் இன்று (16-ம் தேதி) கடைசி மற்றும் 3-வது ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு கெய்ன்ஸ் நகரில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

கர்நாடக கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் வெங்கடேஷ் பிரசாத்: கர்​நாடக மாநில கிரிக்​கெட் சங்க தேர்​தலில் முன்​னாள் இந்​திய வேகப்​பந்து வீச்​சாளர் வெங்​கடேஷ் பிர​சாத் போட்​டி​யிட உள்​ளார். கர்​நாடக கிரிக்​கெட் சங்க நிர்​வாகி​களின் பதவிக்​காலம் வரும் செப்​டம்​பர் 30-ம் தேதி​யுடன் முடிவடைகிறது. இதனால் அக்​டோபர், நவம்​பர் மாத இடைவேளை​யில் புதிய நிர்​வாகி​களுக்​கான தேர்​தல் நடை​பெறும் என கருதப்​படு​கிறது. இந்​நிலை​யில் முன்​னாள் இந்​திய வேகப்​பந்து வீச்​சாளர் வெங்​கடேஷ் பிர​சாத் தலை​மை​யில் ஒரு குழு​வினர் கர்​நாடக மாநில கிரிக்​கெட் சங்க தேர்​தலில் போட்​டி​யிட உள்​ளனர். 56 வயதான வெங்​கடேஷ் பிர​சாத் பயிற்​சி​யாளர், தேர்​வாளர் மற்​றும் நிர்​வாக பொறுப்​பு​களில் பணி​யாற்றி உள்​ளார். அனில் கும்ப்ளே 2013 முதல் 2016 வரை கர்​நாடக கிரிக்​கெட் சங்க தலை​வ​ராக இருந்த போது வெங்​கடேஷ் பிர​சாத் துணைத் தலை​வ​ராகப் பணி​யாற்​றி​யிருந்​தார். ஆனால், அதன் பின்​னர் வெங்​கடேஷ் பிர​சாத் நிர்​வாக பணி​களில் இருந்து விலகி பயிற்​சி​யாளர், நிபுணர் மற்​றும் வர்​ணனை​யாள​ராக பணி​யாற்​றி​னார். ஐபிஎல் தொடரில் பஞ்​சாப் கிங்​ஸ் அணி​யின் பயிற்​சி​யாள​ராக பணி​யாற்​றி இருந்​தார்​.

2,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் அங்கிதா சாதனை: இஸ்​ரேலில் கிராண்ட்​ஸ்​லாம் ஜெருசலேம் தடகளப் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிருக்​கான 2 ஆயிரம் மீட்​டர் ஸ்டீபிள்​சேஸில் இந்​தி​யா​வின் அங்​கிதா தியானி பந்தய தூரத்தை 6:13.92 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து சாம்​பியன் பட்​டம் வென்​றார். இதற்கு முன்​னர் பாருல் சவுத்ரி பந்தய தூரத்தை 6:14.38 விநாடிகளில் கடந்​ததே தேசிய சாதனை​யாக இருந்​தது.

இதை தற்​போது 23 வயதான ஒலிம்​பிய​னான அங்​கிதா தியானி முறியடித்​துள்​ளார். இஸ்​ரேலின் அட்வா கோஹன் 6:15.20 விநாடிகளி​லும், டென்​மார்க்​கின் ஜூலி​யான் ஹ்விட் 6:17.80 விநாடிகளி​லும் இலக்கை அணி முறையே 2 மற்​றும் 3-வது இடத்தை பிடித்​தனர். தற்​போதைய வெற்​றி​யின் மூலம் கிடைத்​துள்ள தரவரிசை புள்​ளி​களு​டன், அடுத்த மாதம் டோக்​கியோ​வில் நடை​பெற உள்ள உலக சாம்​பியன்​ஷிப் தொடரில் இடம் பெறும் 3000 மீட்​டர் ஸ்டீபிள்​சேஸுக்கு தகுதி பெறு​வதற்​கான வாய்ப்​பு​களை அங்​கிதா அதி​கரித்​துக்​ கொண்​டுள்​ளார்​.



Read More

Previous Post

மழலையர் பள்ளி மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கட்டாய பாடம்! நாட்டிலேயே இந்த மாநிலம் தான் முதலில் அமல்படுத்துகிறது | இந்தியா

Next Post

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் | Makkal Osai

Next Post
சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் | Makkal Osai

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin