Last Updated:
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்று நடைபெற்று வரும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இவற்றில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடரை இழந்த நிலையில், அடுத்ததாக டி20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் முதல் போட்டி மழை காரணமாக முடிவு அறியப்படாமல் கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று மெல்போர்னில் நடைபெறுகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்த போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 17 வயது கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் நேற்று காலமானார். அதாவது பயிற்சியின் போது அவருடைய கழுத்தில் பந்து பட்டதில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்திய அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து இன்றைய ஆட்டத்தில் பங்கேற்றனர். இந்திய அணியின் இந்த நடவடிக்கை வரவேற்பைப் பெற்று வருகிறது.
October 31, 2025 4:08 PM IST


