இந்த வைரஸ்கள் தற்போதைக்கு மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படவில்லை. இருப்பினும், அவை கடல்சார் சூழல் அமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பாக நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை ஒழுங்குபடுத்தவும், கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் கந்தகத்தின் இயற்கையான சுழற்சிகளைப் பராமரிக்கவும் உதவுகின்றன. சில வைரஸ்கள், கடுமையான சூழல்களில் நுண்ணுயிரிகள் உயிர்வாழ உதவக்கூடிய மரபணுக்களையும் கொண்டுள்ளன. மனிதர்களால் எட்ட முடியாத எண்ணற்ற மர்மங்கள் கடலின் ஆழத்தில் இன்னும் புதைந்துள்ளன என்பதையே இது நமக்கு மீண்டுமொருமுறை உணர்த்தியுள்ளது.


