Last Updated:
பாஜக எம்.பி. கங்கனா ரனாவத், மணாலியில் ஆளே இல்லாத வீட்டிற்கு 1 லட்சம் ரூபாய் மின் கட்டணம் விதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் ஆளே இல்லாத தனது வீட்டிற்கு 1 லட்சம் ரூபாய் மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். இவர் இமாச்சல் பிரதேச மாநிலம் மணாலியில் பாஜக சார்பில் போட்டியிட்டு கடந்த ஆண்டு எம்.பி.யாக வெற்றி பெற்றார். இவருக்கு மணாலியில் ஒரு வீடு உள்ளது. ஆனால் அங்கு வீட்டினர் யாரும் வசிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், மணாலியில் உள்ள தனது வீட்டில் ஆளே இல்லாதபோதும் ரூ.1 லட்சம் மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இதுகுறித்து மணாலியில் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது, மேலும் ஆளே இல்லாத தனது வீட்டிற்கு 1 லட்சம் ரூபாய் மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
Mandi, Himachal Pradesh: BJP MP Kangana Ranaut says, “In Himachal Pradesh, the Congress has created such a miserable situation. This month, I received an electricity bill of ₹1 lakh for my house in Manali, where I don’t even stay! Just imagine the condition here…” pic.twitter.com/6AAzvTekrt
— IANS (@ians_india) April 8, 2025
மேலும் காங்கிரஸ் ஆட்சியாளர்களை ஓநாய்கள் என்று விமர்சித்த கங்கனா, அவர்கள் கைககளில் இருந்து இமாச்சலை காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். நடிகை கங்கனாவின் ஆளே இல்லாத வீட்டிற்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Himachal Pradesh
April 09, 2025 12:51 PM IST


