இந்நிலையில் முதல்வரின் இதுதொடர்பான பதிவைப் பகிர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும் எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவின் பலம் அதன் பன்முகத் தன்மை. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் குரல் எழுப்ப உரிமை உள்ளது.
ஆனால், மோடி அரசு, ஆளுநர்களைப் பயன்படுத்தி சில குறிப்பிட்ட மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது.
இது கூட்டாட்சி மீதான ஆபத்தான தாக்குதல். இதைக் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

