ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்து வரும் 10 நாட்களில் போட்டிகள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்த உள்ளன. தரவரிசை பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நிலையில் முதல் 2 இடங்களில் இருக்கும் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் எளிதாக முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 2 இடங்களுக்கு ஹைதராபாத், சென்னை, டெல்லி, லக்னோ, பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்து வரும் போட்டிகளின் முடிவும் மற்ற அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில் தரவரிசை பட்டியலில் 5-ஆம் இடத்தில் உள்ள டெல்லி அணியும், 7-ஆம் இடத்தில் உள்ள பெங்களூரு அணியும் நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதுகின்றன.
இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை வலுப்படுத்திக் கொள்ளும். இந்நிலையில் நாளை நடைபெறும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அதன் கேப்டன் ரிஷப் பந்த் இடம் பெற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 7ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியின் போது மெதுவாக பந்து வீசியதால், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்துக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மற்ற வீரர்களுக்கு 12 லட்சம் ரூபாய் அல்லது போட்டிக்கான ஊதியத்தில் 50 சதவீதத்தை அபராதத்தை செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர்.
நாளை நடைபெற உள்ள போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சூழலில், அதில் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பந்த் இடம் பெற மாட்டார் என்ற அறிவிப்பு டெல்லி அணி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)