Last Updated:
தற்போது நிலவை சுற்றிவரும் ஆர்டெமிஸ்-II குழுவினர், 1970-இல் நிகழ்த்திய சாதனையை முறியடித்ததாக நாசா அறிவித்துள்ளது.
பூமியில் இருந்து 4,06,764 கிலோ மீட்டர் தூரம் விண்வெளியில் பயணித்துள்ள ’ஆர்டெமிஸ் 2’ குழுவினர், பூமியில் இருந்து விண்வெளியில் அதிக தூரம் பயணம் செய்தவர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.
சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை நிலவை நோக்கி அழைத்துச் செல்லும் ’ஆர்டெமிஸ் 2’ என்ற திட்டத்தை நாசா உருவாக்கியது. அதன்படி, நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நான்கு விண்வெளி வீரர்களுடன் ஓரியன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்நிலையில், தற்போது நிலவை சுற்றிவரும் ஆர்டெமிஸ்-II குழுவினர், 1970-இல் நிகழ்த்திய சாதனையை முறியடித்ததாக நாசா அறிவித்துள்ளது.
Artemis II
1970-இல் நிலவை நோக்கி பயணம் செய்த அப்பல்லோ-13 குழுவினர் பூமியில் இருந்து 4,00,171 கிலோ மீட்டர் பயணித்திருந்தனர். தற்போது நிலவை சுற்றி வரும் வீரர்கள் பூமியில் இருந்து 4,06,764 கிலோ மீட்டர் சென்றதாக நாசா அறிவித்துள்ளது. நிலவை நோக்கிய 10 நாட்கள் பயணத்தில் நாசா வீரர்கள் மொத்தமாக 11,02,400 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்திருப்பார்கள் என நாசா தெரிவித்துள்ளது.
Apr 07, 2026 12:57 PM IST


