ஆர்ச்சர்ட் சாலையில் வெளிநாட்டு பெண்கள் குழு வெளிப்படையாக ஆண்களை அணுகுவதைக் காண முடிவதாக ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.
சமீப மாதங்களாக, ஃபோரம் தி ஷாப்பிங் மாலுக்கு வெளியே வெளிநாட்டு பாலி#யல் ஊழியர்கள் தொடர்ந்து காணப்படுவதாக அது கூறியுள்ளது. அதுவும் குறிப்பாக இரவு நேரத்தில் தான் அவர்கள் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.
வெளிநாட்டு பெண்கள்
அதன் நிருபர் அந்தப் பகுதியைப் பார்வையிட்டபோது, அந்தி சாய்ந்ததுக்கு பிறகு சுமார் 10 பெண்கள் நடைபாதையில் நின்றிருப்பதைக் கண்டார்.
மேலும் சிலர் பெஞ்சுகளில் அமர்ந்திருந்தனர், மற்றவர்கள் மாலுக்கு வெளியே படிகளில் அமர்ந்து, தங்களுக்கு ஏற்ற வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருப்பதாக நிருபர் கூறினார்.
ஒன்றுக்கு மேற்பட்ட முறை பார்க்கும் ஆண்கள் டார்கெட்
20 – 40 வயதுக்குள் இருக்கும் என நம்பப்படும் அந்தப் பெண்கள், எவர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை அவர்களை பார்க்கிறாரோ அந்த ஆண்களை அவர்கள் அணுகுவதைக் காண முடிந்தது என்றார்.
சில நேரங்களில், அவர்கள் உடல் ரீதியாகவும் ஆண்களிடம் தொடர்பு கொள்ளத் தொடங்கியதாகவும் அல்லது “என் காதலனாக இன்றிரவு என்னோடு இரு” போன்ற காதல் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
சிங்கப்பூரில் 6 வருடத்துக்கு முன் நடந்த சம்பவம் – வெளிநாட்டு ஊழியருக்கு சிறை!
அவர்களுக்குள் பேச்சுவார்த்தை பெரும்பாலும் விரைவாக நடந்தன. சில ஆண்கள் அந்த பெண்களுடன் பேரம்பேசி, ஐந்து நிமிடங்களுக்குள், டாக்ஸி அல்லது தனியார் வாடகை காரில் ஒன்றாக செல்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்தே மாலுக்கு வெளியில் இந்த நடவடிக்கைகள் தொடங்கியதாகவும், வியட்நாமைச் சேர்ந்த பலர் உட்பட பெரும்பாலும் வெளிநாட்டுப் பெண்கள் இதில் இருப்பதாகவும் அந்தப் பகுதியைச் சேர்ந்த அலுவலக ஊழியர் ஒருவர் ஷின் மினிடம் தெரிவித்தார்.
நற்பெயரை பாதிக்கும் செயல்
“இங்கே நிறைய சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர், அவர்களில் பலர் குடும்பங்களுடன் இங்கு வந்துள்ளனர்,” என்று கூறிய அவர், “பொது இடத்தில் இதுபோன்ற பெண்களின் அநாகரிகமான செயல்கள் சிங்கப்பூரின் நற்பெயரை பாதிக்கலாம்” என்றார்.
இரவு 11 மணியளவில் உச்சத்தை எட்டும் இந்த செயல்பாடு, அதிகாலை 3 அல்லது 4 மணி வரை தொடரலாம் என்றும் அவர் கூறினார்.
காவல்துறையிடம் புகார் செய்யலாம்
சந்தேகத்திற்குரிய இதுபோன்ற நடவடிக்கையைக் காணும் பொதுமக்கள் காவல்துறையிடம் புகார் செய்யலாம்.
சிங்கப்பூர் சட்டத்தின் கீழ், பொது இடங்களில் ஆண்களை தகாத உறவுக்காக வற்புறுத்தி அழைப்பது குற்றமாகும்.
டோட்டோவில் மீண்டும் “S$10 மில்லியன்” பிரம்மாண்ட முதல் பரிசு – அதிஷ்ட கடைகள் எது?
PHOTO: Shin Min Daily News