விராட் கோலி இதுவரை 125 டி20 போட்டிகளில் விளையாடி, 4,188 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 48.69 ஆகும். அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 59 பந்துகளுக்கு 76 ரன்கள் எடுத்த கோலி, ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். ஓய்வு அறிவிப்பின் போது 36 வயதாகி இருந்த கோலி, 2014 மற்றும் 2016 டி20 உலகக் கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

