நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பிரமாண்ட வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய டெல்லி அணி, 19.1 ஓவர்களிலேயே 140 ரன்கள் மட்டுமே ஆல் அவுட்டானது. இதனால், 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பெங்களூரு அணி, 12 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
டெல்லி மற்றும் லக்னோ அணிகளும் 12 புள்ளிகளுடன் இருந்தாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி அணிக்குத்தான் 5ஆவது இடம். இதையடுத்து, சென்னைக்கு எதிராக வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியிலும் வெற்றிபெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை அதிகப்படுத்தலாம். இருப்பினும், ஐதரபாத், லக்னோ அணிகள் மீதமுள்ள போட்டிகளில் வெற்றிபெற்றால், சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் வென்றாலும் வாய்ப்பில்லை.
இல்லை என்றால், வரும் 18ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் சென்னைக்கு எதிரான போட்டியில் 200 ரன்களுக்கு மேல் அடித்து, அதிகபட்ச ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால், நெட் ரன் ரேட் அடிப்படையில், சென்னை அணியை வெளியேற்றி, பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி தகுதி பெறலாம்.
சென்னை அணியை பொறுத்தவரை, ஏற்கெனவே ஞாயிற்றுக்க்கிழமை நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி, 14 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் இருக்கிறது. மே 18ஆம் தேதி ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றால், மற்ற அணிகளை விட, நெட் ரன் ரேட் அதிகமாக இருப்பதால், பிளே ஆஃப் சுற்றுக்கு எளிதாக வெற்றிபெறலாம். சிஎஸ்கே அணி தற்போது 7 போட்டிகளில் வெற்றிபெற்று, 14 புள்ளிகள் மற்றும் நெட் ரன் ரேட் 0+.528 உடன் புள்ளிப் பட்டியலில் இடத்தில் இருப்பதால், பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)