ராமரை வணங்குபவர்களுக்கு ஆணவம் வந்துவிட்டதால், அவர்களின் வெற்றியை 241 ஆக ராமர் குறைவிட்டதாகக் கூறிய ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்தரேஷ் குமார், ஒரு மிகப்பெரிய யு டர்ன் அடித்திருக்கிறார்.
அதாவது, தான் கூறியதன் அர்த்தம் என்னவென்றால், நடந்து முடிந்த தேர்தலில், ராமரை எதிர்த்தவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள், ராமரை வழிபட்டவர்கள், ஆட்சிக்கு மீண்டும் வந்திருக்கிறார்கள் என்று கூறியதாக நேற்று சொன்ன விமர்சனத்துக்கு இன்று விளக்கம் கொடுத்துள்ளார்.

&w=1200&resize=1200,675&ssl=1)