இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 25ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், 2 ஆளுமைகளும் பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.
கேட்ஸ் தொழில்நுட்பத் துறையில் தனது தோற்றம் குறித்து பேசினார். உலகில் சிப்(chip) அதிசயம் நடந்த நேரத்தில் தான் பிறந்தது மிகவும் அதிர்ஷ்டமானது என்றார். தனக்கு நல்ல கல்வி கிடைத்ததாகவும், வாழ்க்கையில் தனக்கு நம்பிக்கையான பார்வை இருந்ததால், ரிஸ்க் எடுக்க பள்ளியை விட்டு வெளியேறுவது ஆபத்தானதாகத் தெரியவில்லை என்றும் பில்கேட்ஸ் பிரதமர் மோடியுடன் தனது உரையாடலின் போது குறிப்பிட்டார்.
Thank you, Prime Minister @NarendraModi, for taking the time to discuss India’s tech-driven development. Breakthroughs in AI and digital public infrastructure—along with innovations in agriculture, education, and healthcare—are solving some of the country’s most critical… https://t.co/nWWve7SBCb
— Bill Gates (@BillGates) March 29, 2024
இறுதியாக, பிரதமர் மோடி அவரிடம் புத்தகங்களைப் பற்றி கேட்ட போது, ஸ்டீவன் பிங்கரின் தி பெட்டர் ஏஞ்சல்ஸ் ஆஃப் அவர் நேச்சர் புத்தகத்தை விரும்புவதற்கான காரணத்தை பில்கெட்ஸ் விளக்கினார். உலகத்தைப் பற்றி நீங்கள் கற்றுக்கொண்டால், குழந்தைகள் இன்னும் இறந்து கொண்டிருப்பதையும், நாம் நம்பமுடியாத முன்னேற்றத்தை அடைந்திருப்பதையும் உணரலாம் என்ற இரட்டைத்தன்மை இந்த புத்தகம் ஒரு அற்புதமான வழியில் படம்பிடிக்கிறது என்று தான் உணர்வதாக பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…