• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆம் ஆத்மி தலைவரின் மனைவி கொடூரக் கொலை… போலீஸ் விசாரணையில் தெரியவந்த உண்மை

GenevaTimes by GenevaTimes
February 16, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஆம் ஆத்மி தலைவரின் மனைவி கொடூரக் கொலை… போலீஸ் விசாரணையில் தெரியவந்த உண்மை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 16, 2025 4:47 PM IST

பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியின் அனோக் மிட்டல் மற்றும் அவரது மனைவி லிப்ஸி மிட்டல் மீது லூதியானாவில் கும்பல் தாக்குதல்.

அப்போது லூதியானா நகரம் பகுதியில், சித்வான் கால்வாய் பாலம் அருகே வந்துக்கொண்டிருந்தபோது, திடீரென ஐந்து பேர் கொண்ட கும்பல் அனோக் மிட்டல் காரை வழிமறித்துள்ளது. அவர் காரை நிறுத்தியதும், அந்தக் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

அந்தக் கும்பல், கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்தத் தாக்குதலில், அனோக் மிட்டலின் மனைவி லிப்ஸி மிட்டல் முகம் மற்றும் கழுத்தில் ஆழமான காயங்கள் ஏற்பட்டு, அவர் நிகழ்விடத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்தத் தாக்குதலின் போது தடுக்க முயன்ற அனோக் மிட்டலுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனோக் மிட்டல் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். இவரை அசோக் பராஷர் பாப்பி என்கிற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கட்சியில் இணைத்துள்ளார்.

இந்நிலையில், காவல்துறையினர் இந்தத் தாக்குதல் சம்பவம் மற்றும் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இது வழிப்பறி கொள்ளை என்றும், அந்தக் கும்பல், அனோக் மிட்டலின் கார் மற்றும் லிப்ஸி மிட்டல் அணிந்திருந்த நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், காவல்துறையினர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது பற்றி அறிய சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்துவருகின்றனர். அதன் பின்னரே இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது தெரியவரும்.

First Published :

February 16, 2025 4:47 PM IST

Read More

Previous Post

வின்னேஸ்வரம் மனைவியுடன் கைது

Next Post

இனவாதத்துக்கு மலேசியர்கள் இடம் தரக்கூடாது- அமைச்சர் கோபிந் சிங் | Makkal Osai

Next Post
இனவாதத்துக்கு மலேசியர்கள் இடம் தரக்கூடாது- அமைச்சர் கோபிந் சிங் | Makkal Osai

இனவாதத்துக்கு மலேசியர்கள் இடம் தரக்கூடாது- அமைச்சர் கோபிந் சிங் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin