டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் கைலாஷ் கெலாட் அறிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான கைலாஷ் கெலாட், அமைச்சரவை மற்றும் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “ஆம் ஆத்மி கட்சிக்குள் கடுமையான சிக்கல்கள் இருப்பதாகவும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வை அரசியல் ஆசைகள் முந்திவிட்டதாகவும்” கூறியுள்ளார்.
மேலும், “மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கொண்டிருந்தால் டெல்லி மாநிலம் வளர்ச்சியடையாது” என்றும் கைலாஷ் கெலாட் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சமீப காலமாக முதல்வர் அதிஷியுடன் கைலாஷ் கெலாட் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருவதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், அவரது ராஜினாமா கவனம் ஈர்த்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
