ஆப்பிள் நிறுவனம் மிகமுக்கிய அம்சங்களை இணைத்து தனது இயங்குதளத்தை (ஐஓஎஸ் 18) மேம்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் செய்யறிவு தொழில்நுட்பத்தில் பல முக்கிய அம்சங்களை தனது ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்து வருகிறது.
அந்தவகையில் தற்போது ஐஓஎஸ் 18 என்ற இயங்குதளத்தில் செய்யறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய சில அம்சங்களை இணைத்துள்ளது. ஆனால் அவை அனைத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் பாராம்பரிய முறைகளை பின்பற்றியே அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பம்சங்கள் மின்னஞ்சல் அனுப்புவது – பல தளங்களில் செயலிகளை பயன்படுத்துவது – என பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளது.
திரையில் செயலிகளின் இடங்களை தேவைக்கேற்ப வைத்துக்கொள்ளும் அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. திரையை டார்க் மோடிற்கு கொண்டுசென்றால் செயலிகளும் தேவைக்கேற்ப தங்கள் நிறத்தை சீரமைத்துக்கொள்ளும்.

