• Login
Thursday, September 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ‘ஐபோன் டியோ’ அறிமுகம்: இந்திய விலை விபரம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 10, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ‘ஐபோன் டியோ’ அறிமுகம்: இந்திய விலை விபரம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
தொழில்நுட்பம் & அறிவியல்
/
ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ‘ஐபோன் டியோ’ அறிமுகம்: இந்திய விலை விபரம்

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள், பேட்டரி திறன் மற்றும் இந்திய விலை விபரங்கள்.  


கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க் தலைமையகத்தில் நடைபெற்ற ‘சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்’ நிகழ்வில், ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான ‘ஐபோன் டியோ’வை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஆப்பிளின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள ஜான் டர்னஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஐபோன் 18 சீரிஸ், ஏர்பாட்ஸ் 5 மற்றும் புதிய வாட்ச் சீரிஸ் சாதனங்களும் வெளியிடப்பட்டன. 

இந்த நிகழ்வு ஆப்பிள் டிவி மற்றும் அதிகாரப்பூர்வ யூட்யூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.  இந்தியாவில் ஐபோன் டியோவின் 256 ஜி.பி. அடிப்படை மாடல் விலை ரூ.2,99,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 512 ஜி.பி. மாடல் ரூ.3,24,900, 1 டி.பி. மாடல் ரூ.3,74,900 மற்றும் 2 டி.பி. மாடல் ரூ.4,49,900 ஆகிய விலைகளில் விற்பனைக்கு வரவுள்ளன. 

ஸ்டார் ஒயிட் மற்றும் நைட் ஸ்கை ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனுக்கான முன்பதிவு அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 23-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.  ஐபோன் டியோவில் 7.6 அங்குல ‘சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர்’ மடிக்கக்கூடிய உள்புறத் திரையும், வெளிப்புறத்தில் 5.4 அங்குலத் திரையும் இடம்பெற்றுள்ளன. 

மடிப்புப் பகுதி பெரிதாகத் தெரியாத வகையிலும் பிரதிபலிப்பைக் குறைக்கும் வகையிலும் உள்புறத் திரை பாலிமர் மற்றும் கண்ணாடிப் பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத் திரை மற்றும் பின்பகுதிக்கு செராமிக் ஷீல்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

கேமரா பிரிவில், தலா 48 மெகாபிக்சல் கொண்ட பிரதான மற்றும் அல்ட்ரா வைடு கேமராக்கள், வினாடிக்கு 120 பிரேம்கள் வேகத்தில் 4கே காணொளி பதிவு செய்யும் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளன. மேலும், முன்புற ‘சென்டர் ஸ்டேஜ்’ கேமராவும், மடிக்கக்கூடிய திரையின் கீழ் ‘பேஸ் டைம்’ கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன.  

நீண்ட பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ள இந்த சாதனத்தில், மின்காந்த வயர்லெஸ் சார்ஜிங் வசதியும், 5 நிமிட சார்ஜிங்கில் 5 மணி நேரம் காணொளி இயக்கும் திறனும் வழங்கப்பட்டுள்ளன. உலகளவில் இ-சிம் வசதியுடன் மட்டுமே வெளியாகும் ஐபோன் டியோ, ‘ஐஓஎஸ் 27’ இயங்குதளத்தில் செயல்படுகிறது. 

இதில் மடிக்கக்கூடிய பெரிய திரையைப் பயன்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் பல செயலிகளை இயக்கும் பிரிக்கப்பட்ட திரை வசதியும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.  

Read More

Previous Post

துலீப் கோப்பை ஃபைனல்: 13 ஆண்டுகளுக்குப் பின் சாம்பியன் பட்டம் வென்றது கிழக்கு மண்டல அணி! | கிரிக்கெட் செய்திகள்

Next Post

குளுவாங் தீ விபத்தில் தாய் உட்பட இரு பிள்ளைகள் உயிரிழப்பு: குற்றவியல் பின்னணி ஏதுமில்லை என காவல் துறை உறுதி! | Makkal Osai

Next Post
குளுவாங் தீ விபத்தில் தாய் உட்பட இரு பிள்ளைகள் உயிரிழப்பு: குற்றவியல் பின்னணி ஏதுமில்லை என காவல் துறை உறுதி! | Makkal Osai

குளுவாங் தீ விபத்தில் தாய் உட்பட இரு பிள்ளைகள் உயிரிழப்பு: குற்றவியல் பின்னணி ஏதுமில்லை என காவல் துறை உறுதி! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin