• Login
Tuesday, November 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஆப்பிரிக்க நாடான கானாவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷியா ஒப்பந்தம்… | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 3, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ஆப்பிரிக்க நாடான கானாவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷியா ஒப்பந்தம்… | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போரைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. சர்வதேச அரங்கில் ரஷியாவைத் தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து உத்திகளை வகுத்து வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷிய அதிபர் புதின் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் தனது கூட்டணியை பலப்படுத்தி வருகிறார்.

ரஷியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு
ஆப்பிரிக்க கண்டத்தில் தனது பொருளாதார, அரசியல் மற்றும் ராணுவ ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக ரஷியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டை மாஸ்கோ மிக பிர மாண்டமாக நடத்தி வருகிறது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, ஆப்பிரிக்க நாடான கானாவுடன் ரஷியா கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அணுசக்தி திட்டங்கள்
இதன்படி, கானா நாட்டின் மின் தட்டுப்பாட்டைப் போக்கவும், தொழில்துறை வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட பிரமாண்ட அணுமின் நிலையம் ஒன்றை அமைக்க ரஷியா ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தகவலை கானா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி சாமுவேல் ஒகுட்ஸெட்டோ அப்லக்வா உறுதிப்படுத்தியுள்ளார்.

ரஷியாவின் அணுசக்தி நிறுவனமான ‘ரோசாட்டம்’ கானா உள்பட மேலும் 4 ஆப்பிரிக்க நாடுகளுடன் இதுபோன்ற அணுசக்தி திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. அணுசக்தி மட்டுமல்லாது. இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ உறவை வலுப்படுத்தவும் புதிய பாதுகாப்புப் படை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஆயுதங்கள்
இதன் மூலம் கானா ராணுவத்துக்கு தேவையான அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை ரஷியா வழங்கவுள்ளது. அதே நேரத்தில், உக்ரைனுக்கு எதிரான போரில் கானா நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் ரஷியா தரப்பில் தன்னார்வலர்களாகவோ அல்லது சட்டவிரோத ஆட்சேர்ப்பு மூலமாகவோ பங்கேற்கக் கூடாது என ரஷிய அதிபர் புதின் தடை விதித்துள்ளார். இது சர்வதேச அரங்கில் கானா மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய முடிவாகப் பார்க்கப்படுகிறது.

கல்வி உதவித்தொகை
மேலும், கானா நாட்டின் விவசாயத் துறையை நவீனமயமாக்கவும், ரஷியாவில் தங்கிப் படிக்கும் கானா நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் கூடுதல் கல்வி உதவித்தொகைகளை வழங்கவும் ரஷியா உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

Gold Price | தொடர் சரிவு… ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் ரூ.80,000க்கு குறையும்…? – நிபுணர்கள் கணிப்பு என்ன?

Next Post

சாமர சம்பத் வழக்கு: பெப்ரவரியில் விசாரணை

Next Post
சாமர சம்பத் வழக்கு: பெப்ரவரியில் விசாரணை

சாமர சம்பத் வழக்கு: பெப்ரவரியில் விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin