Last Updated:
ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சண்டையில் 5 பேர் உயிரிழப்பு, பதற்றம் நீடிப்பு; தெஹ்ரீக்-ஏ-தலிபான், ஐஎஸ் குற்றச்சாட்டு, அமெரிக்கா சீனா ரஷ்யா தலையீடு.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.
தங்கள் நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திவரும் தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்புக்கு ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்கள் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டிவருகிறது. இதேபோல், தங்கள் நாட்டில் தாக்குதல் நடத்தும் ஐஎஸ் பயங்கரவாதிகளை அண்டை நாடான பாகிஸ்தான் பாதுகாக்கிறது என்பது தலிபான்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த அக்டோபரில் இருநாடுகள் இடையே நடந்த மோதல், பதற்றத்தை அதிகப்படுத்தியது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தலையிட்டு சண்டை நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்தின.
அந்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தானின் சமன் மற்றும் ஆப்கானிஸ்தானின் ஸ்பின் போல்டாக் எல்லை பகுதிகளில் மீண்டும் மோதல் நடந்ததாக இரு தரப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இருநாட்டு ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச்சூடு நடந்ததில் ஆப்கானிஸ்தான் தரப்பில் மூன்று குழந்தைகள், ஒரு பெண் உள்பட 5 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தரப்பில் ஒரு பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
December 07, 2025 8:30 AM IST
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இடையே துப்பாக்கி சண்டை.. 5 பொதுமக்கள் பலி!


