• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆப்கன் உடனான போட்டியை புறக்கணிக்க வேண்டும்: இங்கிலாந்து வழியில் தென் ஆப்பிரிக்கா | boycott cricket match with afghanistan says South Africa sports minister

GenevaTimes by GenevaTimes
January 9, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஆப்கன் உடனான போட்டியை புறக்கணிக்க வேண்டும்: இங்கிலாந்து வழியில் தென் ஆப்பிரிக்கா | boycott cricket match with afghanistan says South Africa sports minister
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கேப் டவுன்: அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான போட்டியை புறக்கணிக்க வேண்டுமென்ற கருத்தை தான் ஆதரிப்பதாக தென் ஆப்பிரிக்க நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சியின் கீழ் கல்வி, விளையாட்டு உட்பட பெண்களுக்கான பல்வேறு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த அணியுடன் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதை இங்கிலாந்து கிரிக்கெட் அணி புறக்கணிக்க வேண்டும் என அண்மையில் அந்த நாட்டின் அரசியல் பிரமுகர்கள், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு அழுத்தம் கொடுத்தனர். இந்தச் சூழலில், அதே கருத்தை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி தற்போது வலியுறுத்தியுள்ளார்.

“கிரிக்கெட் விளையாட்டு மூலம் இந்த உலகுக்கு, குறிப்பாக விளையாட்டுத் துறையில் உள்ள பெண்களுக்கு சொல்ல விரும்பும் செய்தி குறித்து கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா, பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உலகத்தில் நிறவெறி பேதம் அதிகம் இருந்த காலத்தில் விளையாட்டில் சமமான வாய்ப்பு மறுக்கப்பட்ட ஓர் இனத்தைச் சேர்ந்தவனாக இருக்கும் நான், இன்று உலகின் எந்தவொரு பகுதியிலும் பெண்களுக்கு எதிராக அதேபோன்ற அநீதி அரங்கேறும்போது, ​​அதை வேறு விதமாகப் பார்ப்பது நியாயமானதாக இருக்காது.

தென் ஆப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டுமா அல்லது இல்லையா என்பது குறித்த இறுதி முடிவு எடுப்பது நான் அல்ல. ஆனால், அந்த முடிவு என்னுடையதாக இருந்தால், அது நிச்சயமாக நடக்காது” என அமைச்சர் கெய்டன் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தலிபான் ஆட்சியில் பெண்கள் மற்றும் சிறுமிகளை மனசாட்சியின்றி அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆப்கானிஸ்தான் உடனான சாம்பியன்ஸ் டிராபி போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும் என சொல்லி சுமார் 160 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு லேபர் கட்சியின் எம்.பி டோனியா, 160 எம்.பி-க்கள் வலியுறுத்தி உள்ள கடிதத்தை அனுப்பி உள்ளார். பெண்களுக்கான உரிமை மறுக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதே காரணத்துக்காக ஆப்கானிஸ்தான் உடன் இரு நாடுகளுக்கு இடையிலான போட்டிகளில் விளையாடுவதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா கடந்த காலங்களில் தவிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் அணி இடம்பெற்றுள்ள அதே குரூப் பிரிவில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணி ஹைபிரிட் முறையில் பங்கேற்று விளையாடுகிறது. அதனால் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.



Read More

Previous Post

சத்தீஸ்கர் எஃகு ஆலையில் ‘சிலோ’ இடிந்து விபத்து: பலர் சிக்கித் தவிப்பதாக அச்சம் | 2 injured, many feared dead as silo collapses at Chhattisgarh plant 

Next Post

‘உயிர் பிழைச்சதே பெருசு…’ – லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ பயங்கர அனுபவம் பகிரும் அமெரிக்கர்கள் | Harrowing escapes from Los Angeles wildfires were made by foot, by car or by grace of strangers

Next Post
‘உயிர் பிழைச்சதே பெருசு…’ – லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ பயங்கர அனுபவம் பகிரும் அமெரிக்கர்கள் | Harrowing escapes from Los Angeles wildfires were made by foot, by car or by grace of strangers

‘உயிர் பிழைச்சதே பெருசு...’ - லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ பயங்கர அனுபவம் பகிரும் அமெரிக்கர்கள் | Harrowing escapes from Los Angeles wildfires were made by foot, by car or by grace of strangers

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin