Last Updated:
ஆப்கன் அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வங்கதேசத்தை படுதோல்வி அடையச் செய்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை இழந்த நிலையில் வங்கதேச கிரிக்கெட் வீரர்களின் வாகனங்களை ரசிகர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.
வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இரு அணிகளும் தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றன. கடந்த 2 ஆம் தேதி இந்த போட்டிகள் தொடங்கின.
முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை வென்றது. அடுத்து நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2 ஆவது போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்திலும் ஆப்கன் அணி வென்றிருந்தது. இதனால் கடைசி போட்டியில் வங்கதேசம் ஆறுதல் வெற்றி பெறுமா என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.
அதற்கு மாற்றமாக ஆப்கன் அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வங்கதேசத்தை படுதோல்வி அடையச் செய்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்நாட்டு அணியின் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களின் வாகனங்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
October 16, 2025 9:11 PM IST