• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆபாச படத்திற்கு அடிமையான தந்தை… பெற்ற மகளுக்கு செய்த கொடூர செயல்… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

GenevaTimes by GenevaTimes
June 23, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஆபாச படத்திற்கு அடிமையான தந்தை… பெற்ற மகளுக்கு செய்த கொடூர செயல்… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆபாச படத்திற்கு அடிமையான தந்தை அதேபோன்ற ஒரு காட்சியில் தன்னுடன் நடிக்க மறுத்ததற்காக 12 வயது மகளை கொடூரமாக அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மஹூபாபாத் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர், கடந்த மாதம் தான் ஹைதராபாத்தில் உள்ள மியாபூருக்கு குடிபெயர்ந்தனர். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு மஹூபாபாத் பகுதிக்கே போய்விடலாம் என்று அவர்களது 12 வயது மகள் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் காணாமல் போய்விட்டதாக, காவல்துறையினரிடம் அவரின் தந்தை புகார் அளித்தார். இதையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின.

விளம்பரம்

கடந்த ஜூன் 14ஆம் தேதி 12 வயது சிறுமி மளிகைக் கடைக்குச் சென்றிருந்த நிலையில், சிறிது நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் அங்கு சென்ற அவரது தந்தை, மஹூபாபாத் நகரத்திற்கு சென்று வரலாம் எனக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். வழியிலேயே ஒரு காட்டுப் பகுதியில் பைக்கை நிறுத்திய தந்தை, தனது மகளை உள்ளே அழைத்துச் சென்று, ஆபாச படம் ஒன்றில், தான் பார்த்த காட்சி ஒன்றை காண்பித்து, அதேபோல் தன்னுடன் நடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அவ்வாறு செய்தால்தான் மஹூபாபாத்துக்கு அழைத்துச் செல்வேன் என்று கூறியுள்ளார்.

விளம்பரம்

ஆனால், அதற்கு சிறுமி மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தந்தை, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, தாயிடம் இதுகுறித்து தெரிவிப்பேன் என்று சிறுமி கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தந்தை, சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ளார். அவர் மயக்கமடைந்து விழுந்த நிலையில், அவரது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார். அதன்பின்னர், காட்டுப் பகுதியில் இருந்து வெளியேறி, தனது இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற அவர், தனது மகளை காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்தார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
6 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை… தெலங்கானாவில் நடந்த கொடூர சம்பவம்!

இதையடுத்து, அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, தந்தை தனது மகளை இருசக்கர வாகனத்தில் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதும், சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தனியாக வந்ததும் பதிவாகியிருந்தது. இதையடுத்து, அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையின்போதுதான், தனது மகளை தானே கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

பின்னர் காட்டுப்பகுதிக்குச் சென்று அழுகிய நிலையில் இருந்த சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர், நாடகமாடிய தந்தை மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பெற்ற மகளை தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

நெருக்கடியை கண்டு ஓடிப்போகும் தலைவர்களால் நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது

Next Post

ஆஸ்திரேலியா எனும் மலையை சாய்த்த ஆப்கானிஸ்தான்… அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு!

Next Post
ஆஸ்திரேலியா எனும் மலையை சாய்த்த ஆப்கானிஸ்தான்… அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு!

ஆஸ்திரேலியா எனும் மலையை சாய்த்த ஆப்கானிஸ்தான்… அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin