Last Updated:
நேபாளத்தில் ஜென் இசட் போராட்டம், சமூக வலைதள தடைகள் குறித்து உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
ஆபாச படங்களை தடை செய்யக்கோரிய வழக்கில் நேபாளத்தில் நடைபெற்ற ஜென் இசட் போராட்டத்தை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆபாச படங்களுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இணையதளங்களில் ஆபாச படங்கள் எளிதில் கிடைப்பதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு ஒழுங்கு நெறிமுறைகளை கொண்டுவர வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தினார்.
ஆபாச படங்களை பார்ப்பது தனி மனிதரையும், சமூகத்தையும் , குறிப்பாக வளர்ந்து வரும் 13 வயது முதல் 18 வயது வரையிலான வளர் இளம் பருவத்தினரையும் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டார். இணைய தளங்களில் எவற்றை கிடைக்கச் செய்வது என்பது குறித்த முறையான வழிவகைகள் இல்லாததாலேயே இதுபோன்று நடப்பதாகவும், அதனால் ஆபாச படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் ஜென் இசட் இளைஞர்கள் போராட்டம் நடத்தியதைக் குறிப்பிட்டு, தடைவிதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும், வழக்கை 4 வாரங்களுக்குப் பிறகு விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
November 03, 2025 5:41 PM IST


