இந்தியாவுக்கு எதிரான தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆபரேஷன் பன்யான் அல் மர்சூஸ் எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையோர மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு – காஷ்மீரில் மே 8, 9 ஆம் தேதி நள்ளிரவில் ட்ரோன் தாக்குதல் நடத்தினர்.
பாகிஸ்தானின் தொடர் ட்ரோன் தாக்குதலை, இந்திய வான் பாதுகாப்புப் பிரிவு துல்லிய தாக்குதல் நடத்தி அனைத்தை ட்ரோன்களையும் அழித்தொழித்தது. பாகிஸ்தான் ட்ரோன்கள் ஜம்மு-காஷ்மீரில் தாக்கியதில் ஒரு குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். இரண்டு பேர் பரிதாபமாக பலியாகினர்.

