‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்தில் இன்று மாலை பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவாதம் மக்களவையில் திங்கள்கிழமை பிற்பகல் தொடங்கியது. இந்த விவாதத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் மக்களவையில் உரையாற்றினர். எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
நாடாளுமன்றத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஜூலை 29) மக்களவையில் உரையாற்றுவார் என்றும், பிரதமர் நரேந்திர மோடி மாலையில் தனது உரையை நிகழ்த்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரை உரையாற்றுவார் என்றும், அவரைத் தொடர்ந்து மாலையில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
PM Modi, Home Minister Amit Shah To Address Lok Sabha Today
இதையும் படிக்க : கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து