• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பிஎஸ்எப் பெண் அதிகாரிக்கு ராணுவ தளபதி பாராட்டு | BSF Neha Bhandari Receives COAS Commendation Disc for Bravery

GenevaTimes by GenevaTimes
June 1, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பிஎஸ்எப் பெண் அதிகாரிக்கு ராணுவ தளபதி பாராட்டு | BSF Neha Bhandari Receives COAS Commendation Disc for Bravery
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சிறப்பாக செயல்பட்ட எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) பெண் அதிகாரி நேகா பண்டாரிக்கு, ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி பதக்கம் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.

எல்லைபாதுகாப்பு படையில் உதவி கமாண்டன்டாக பணியாற்றும் பெண் அதிகாரி நேகா பண்டாரி. இவர் ஜம்மு மாவட்டத்தின் அக்னூர் பகுதியில் பர்க்வல் என்ற இடத்தில் பணியாற்றும் படைக்கு தலைமை தாங்குகிறார். சர்வதேச எல்லையில் உள்ள இப்பகுதியிலிருருந்து பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் 150 மீட்டர் தூரத்தில்தான் உள்ளன. அங்குள்ள நடமாட்டத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு, நேகா பண்டாரி தலைமையிலான படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். இங்குள்ள எல்லை பாதுகாப்பு படை பிரிவில் நேகா பண்டாரியுடன், 6 பெண் காவலர்களும் போர் களத்தில் இறங்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இவர்களின் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தானின் 3 நிலைகளில் இருந்த வீரர்கள் தப்பியோடினர். அதன்பின் அங்கிருந்து தாக்குதல் நடைபெறவில்லை.

நேகா பண்டாரி தலைமையிலான படைப்பிரிவுக்கு எல்லை பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் ஏற்கெனவே பாராட்டு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி காஷ்மீர் சென்று எல்லையில் ஆய்வு பணி மேற்கொண்டார். அப்போது அக்னூர் பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்பு படை நிலைக்கு சென்ற உபேந்திர திவிவேதி, நேகா பண்டாரி தலைமையிலான படைப்பிரிவினரை சந்தித்து பதக்கம் மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.

இது குறித்து உதவி கமாண்டன்ட் நேகா பண்டாரி கூறுகையில், ‘‘இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் உள்ள நிலைக்கு எனது தலைமையிலான படைப்பிரிவு தலைமை தாங்கியதில் பெருமிதம் கொள்கிறேன். எனது தாத்தா ராணுவத்தில் பணியாற்றினார். எனது பெற்றோர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎப்) பணியாற்றினர். நான் பாதுகாப்பு படையில் பணியாற்றும் 3-ம் தலைமுறை அதிகாரி’’ என்றார்.



Read More

Previous Post

சந்திக்க வரச் சொல்லி விட்டு தியேட்டரில் படம் பார்த்த அமைச்சர்

Next Post

‘மும்பை இந்தியன்ஸுக்கு மட்டும் எப்போதும் அதிர்ஷ்டம் அடிப்பது எப்படி?’ – அஸ்வின் | How Mumbai Indians always have luck Ashwin questions ipl 2025

Next Post
‘மும்பை இந்தியன்ஸுக்கு மட்டும் எப்போதும் அதிர்ஷ்டம் அடிப்பது எப்படி?’ – அஸ்வின் | How Mumbai Indians always have luck Ashwin questions ipl 2025

‘மும்பை இந்தியன்ஸுக்கு மட்டும் எப்போதும் அதிர்ஷ்டம் அடிப்பது எப்படி?’ - அஸ்வின் | How Mumbai Indians always have luck Ashwin questions ipl 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin