பொங்கோல் சென்ட்ரலில் லாரி (Lorry) மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு இடையே ஏற்பட்ட சம்பவத்தில் பெண் ஒருவர் லாரி முன் விழுந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
டிக்டாக்கில் வெளியான காணொளியில், கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி அன்று இரண்டு ஆடவர்கள் லாரியை நகரவிடாமல் தாங்கி பிடித்து முயற்சி செய்வதை காணலாம்.
சிங்கப்பூர் வந்த விமானத்தில் பணிப்பெண்ணை கழிவறையில் தள்ளி சீண்டல்… சிக்கிய இந்திய நாட்டவர்
ஆனாலும் அந்த லாரி தொடர்ந்து நகர தொடங்குகிறது, பின்னர் அந்தப் பெண் தரையில் விழுவதையும், விபத்தில் சிக்காமல் மயிரிழையில் தப்பிப்பதையும் காண முடிந்தது.
அதில் ஒருவர், லாரியை உதைத்து அதை எப்படியாது தள்ளி நிறுத்த வேண்டும் என்ற தீவிர முயற்சியில் ஈடுபடுவதையும் காணலாம்.
அந்த காணொளி தலைப்பில், மோட்டார் சைக்கிளின் மீது லாரி மோதியதாகக் கூறப்படுகிறது, ஆனால் ஓட்டுநர் அதற்கு பொறுப்பேற்க மறுத்துவிட்டார் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து, அன்று மாலை 6.10 மணிக்கு பொங்கோல் சென்ட்ரல் பிளாக் 166A-ல் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அதன் பின்னர், 54 வயதான அந்த பெண் மருத்துவமனைக்கு சுயநினைவுடன் கொண்டு செல்லப்பட்டதாகவும் போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதனை அடுத்து, 60 வயதுமிக்க ஆடவர் கைது செய்யப்பட்டார் என்றும், மேலும் ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கியதற்காக அவர் விசாரிக்கப்படுகிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
GE2025: சிங்கப்பூரில் தேர்தல் நேரத்தில் செய்யக் கூடாதவை – தெரிந்துகொள்ளுங்கள்

