Last Updated:
மத்திய அரசு பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களின் பெயரில் 21, 61, 67 தொடங்கும் எண்கள் மூலம் சைபர் மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களின் பெயர்களில் சைபர் குற்றவாளிகள் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்கள் விழிப்புடன் இருந்தாலும், சைபர் குற்றவாளிகள் நாள்தோறும் புது புது யுக்திகளை கையாண்டு பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களின் பெயர்களில் நூதன முறை ஒன்றை சைபர் குற்றவாளிகள் கையாள்வதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது, “நீங்கள் ஆர்டர் செய்த பொருளை பெறுவதற்கு, இந்த எண்ணை தொடர்புக் கொள்ளுங்கள் என்று செல்போன்களுக்கு சைபர் குற்றவாளிகள் குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். அந்த செல்போன் எண்கள் 21, 61, 67 என்று தொடங்குவதாக எச்சரித்துள்ள மத்திய அரசு, இந்த எண்கதொடர்பு கொண்டால், இணைய வசதி இல்லாத போதும் செல்போன்கள் ஹேக் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
எனவே, 21,61, 67 என்று தொடங்கும் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஒரு வேளை நீங்கள் தொடர்பு கொண்ட நபர், உங்கள் அழைப்பை வேறு ஒருவருக்கு மாற்றுவதை அறிந்தால், உடனடியாக உள்ளீடு செய்ய வேண்டிய எண் மற்றும் குறியீடுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மேலும், சைபர் குற்றங்கள் குறித்து, பிரத்யேக தொலைபேசி எண் மற்றும் இணையதளம் வாயிலாக புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


