• Login
Tuesday, November 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆன்லைன் மோசடிகளில் பணத்தை இழந்தவர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு! ஜனவரி 1 முதல் துவக்கம்! RBI-இன் புதிய விதிமுறை! | RBI Digital Fraud Rules from January 1, 2027: Get Up to Rs.25,000 Compensation

GenevaTimes by GenevaTimes
November 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஆன்லைன் மோசடிகளில் பணத்தை இழந்தவர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு! ஜனவரி 1 முதல் துவக்கம்! RBI-இன் புதிய விதிமுறை! | RBI Digital Fraud Rules from January 1, 2027: Get Up to Rs.25,000 Compensation
Share on FacebookShare on Twitter


ஆன்லைன் மோசடிகளில் பணத்தை இழந்தவர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு! ஜனவரி 1 முதல் துவக்கம்! RBI-இன் புதிய விதிமுறை!

இந்தியாவில் நடக்கும் மோசடி சம்பவங்கள் சில காலமாக அதிகமாகவுள்ளது. மோசடிக்காரர்கள் புதுப்புது யுக்திகளைப் பயன்படுத்தி மக்களின் பணத்தை அபகரிக்கின்றனர். போலியான வாடிக்கையாளர் சேவை எண்கள், ஃபிஷிங் லிங்குகள், முதலீட்டு திட்டங்கள் என ஏமாற்ற பல விஷயங்களைச் செய்கின்றனர். அதிலும் குறிப்பாக முதியவர்கள் தான் இது போன்ற மோசடிகளுக்கு பெரிதும் ஆளாகின்றனர்.

பெரும்பாலான நேரங்களில் பாதிக்கப்படும் நபர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்ட பிறகு தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதையே உணர்கின்றனர். அதன் பிறகு புகார் அளித்தாலும் பணத்தை திரும்ப பெறுவதற்கு சில செயல்முறைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. அப்படி செய்தால் வங்கிகள் உங்கள் பணத்தை கண்டுபிடித்து கொடுத்துவிடும். சில நேரங்களில் பணம் கிடைக்காமலும் போய்விடும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய விதியை கொண்டு வந்துள்ளது.

ஆன்லைன் மோசடிகளில் பணத்தை இழந்தவர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு! ஜனவரி 1 முதல் துவக்கம்! RBI-இன் புதிய விதிமுறை!

இனி மோசடியால் ஏற்படும் முழு நஷ்டத்தையும் ஏமாந்தவர்கள் சுமக்க வேண்டியதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் 85 சதவீதம் வரை அல்லது அதிகபட்சமாக ரூ.25,000 வரை நஷ்ட ஈடாக வழங்க ஆர்பிஐ முடிவு செய்துள்ளது.

புதிய விதிகள் எப்போது அமலுக்கு வருகிறது?: இந்த புதிய விதி 2027-ஆம் ஆண்டின் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதிலிருந்து தொடர்ந்து ஓராண்டு வரை இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கும். அதேபோல மோசடி சம்பவங்களுக்கு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தான் காரணமா? என்பதை நிரூபிக்கும் பொறுப்பையும் ஆர்பிஐ வங்கிகள் மீது சுமத்தியுள்ளது.

POS இயந்திரங்கள், ஏடிஎம் பரிவர்த்தனைகள், நெட் பேங்கிங் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் இது பொருந்தும். கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் நடந்த சைபர் மோசடிகளால் சுமார் ரூ.52,976 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 8 சதவீதம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி என்ற பெயரில் நடந்துள்ளது,

அதிகபட்ச நஷ்ட ஈடு எவ்வளவு?: மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.50,000-த்திற்கு மேல் இருக்கக் கூடாது. அதற்குள் இருந்தால் ரூ.25,000 வரை நஷ்டஈடாகப் பெற முடியும். மேலும் இந்த சலுகையை ஒருவர் தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் தான் பயன்படுத்த முடியும்.

உதாரணமாக உங்களிடம் இருந்து மோசடிக்காரர்கள் ரூ.20,000-த்தை ஏமாற்றி விட்டார்கள். தற்போது வங்கியால் 10,000 ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு பணத்தை பெற்றவரின் அக்கவுண்ட்டை ஃப்ரீஸ் செய்யும் ஆப்சன் இருக்கும். இதன் மூலம் வங்கிகள் தொகையை மீட்டு விட்டால் உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.10,000. இதில் 80 சதவீதம் என்றால் ரூ.8,500.

இந்த ரூ.8,500 உங்களுக்கு நஷ்ட ஈடாக கிடைக்கும். அதே போல நீங்கள் 40,000 ரூபாய் ஏமாந்து விட்டீர்கள். வங்கியால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. தொகையை மீட்க முடியவில்லை என்றால் உங்களுக்கு மொத்தம் 40,000 ரூபாய் நஷ்டம். இதில் 85 சதவீதம் என்றால் ரூ.34,000 வரும். ஆனால் அதிகபட்சமாக ரூ.25,000 மட்டுமே நஷ்ட ஈடு கிடைக்கும்.

மோசடி நடந்திருந்தால் உங்களுக்கு வழங்கும் நஷ்ட ஈட்டை வங்கியே வழங்கிவிடும். அதற்கு நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி தான் முழு பொறுப்பு. முதலில் வங்கிகள் உங்கள் புகாரை விசாரிக்கும். பின்னர் ஏதாவது தொகையை மீட்க முடியுமா என்ற கோணத்தில் பரிசீலிக்கும். தொகையை மீட்க முடியவில்லை என்றால் நிகர நஷ்டத்தை வங்கியே செலுத்தும். வாடிக்கையாளர்களுக்கு வங்கியே நஷ்ட ஈடு வழங்கினாலும் ஆர்பிஐயும் வங்கிகளும் இணைந்த இந்த தொகையை பகிர்ந்து கொள்ளும்.

மோசடி நடந்தால் எப்படி புகார் அளிக்க வேண்டும்?: அதிகபட்ச நஷ்ட ஈடு பெற வாடிக்கையாளர்கள் சில விஷயங்களை செய்ய வேண்டும். மோசடி நடந்ததிலிருந்து 5 நாட்களுக்குள் வங்கியில் புகார் அளிக்க வேண்டும். வங்கியில் தெரிவித்த பிறகு தேசிய சைபர் கிரைம் இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம் அல்லது 1930 என்ற இலவச நம்பருக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

Share This Article

Story first published: Tuesday, November 3, 2026, 19:46 [IST]

Other articles published on Nov 3, 2026

Read More

Previous Post

பிரித்தானியாவுக்கு பேராபத்து: புடினின் அடுத்த இலக்கு..!

Next Post

கும்பலின் அராஜக செயலால் உயிரிழந்த ஆடவர் | Makkal Osai

Next Post
கும்பலின் அராஜக செயலால் உயிரிழந்த ஆடவர் | Makkal Osai

கும்பலின் அராஜக செயலால் உயிரிழந்த ஆடவர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin