Last Updated:
எளிமை தன்மையோடு பாதுகாப்பை இணைத்து தடையில்லாத அனுபவத்தை யூசர்கள் பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த தீர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.
M2P மற்றும் MinkasuPay போன்ற நிறுவனங்களுடன் பார்ட்னர்ஷிப் வைத்துக் கொள்வதன் மூலமாக ஃபெடரல் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலமாக செய்யும் ஆன்லைன் டிரான்ஸ்ஷாக்ஷன்களுக்கு பயோ மெட்ரிக் சரிபார்ப்பு முறையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக யூசர்கள் ஒவ்வொரு முறை ஆன்லைன் பர்சேஸ் செய்யும்போது தங்களுடைய கைரேகை அல்லது ஃபேஸ் IDயை பயன்படுத்த வேண்டும். இது பாதுகாப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், பண பரிமாற்ற வேகம் மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.
முன்னதாக OTPக்கள் மூலமாக செய்யப்பட்டு வந்த இந்த பயோமெட்ரிக் வெரிஃபிகேஷன் செயல்முறை கைரேகை அல்லது ஃபேஸ் ID கொண்டு மாற்றப்பட்டு ஒவ்வொரு டிரான்ஸாக்ஷன் செய்வதற்கான நேரத்திலும் 3 முதல் 4 வினாடிகள் குறைத்துள்ளது. அதே சமயத்தில், பாதுகாப்பும் மேம்படுத்தப்படுகிறது. எளிமை தன்மையோடு பாதுகாப்பை இணைத்து தடையில்லாத அனுபவத்தை யூசர்கள் பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த தீர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.
“இது வெறும் ஒரு தொழில்நுட்ப மேம்பாடு கிடையாது. எங்களுடைய கஸ்டமர்கள் வங்கி அனுபவத்தில் எந்த மாதிரி ஒரு மாற்றத்தை அனுபவிக்கிறார்கள் என்பதை பொறுத்தது. பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையானது பேமெண்ட்களை பாதுகாப்பாகவும், தடையில்லாமல் செய்வதற்கும் இது உதவுகிறது. கஸ்டமர்களின் சௌகரியம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதே எங்களுடைய வங்கி நோக்கமாக கொண்டுள்ளது”, என்று ஃபெடரல் வங்கியின் தேசிய தலைவர் விராத் சுனில் திவான்ஜி கூறுகிறார்.
“பாதுகாப்பான மற்றும் எளிமையான இந்த சரிபார்ப்பு முறை பயனர் அனுபவத்தை மேம்படுத்துகிறது. ஆன்லைன் கார்டு டிரான்சாக்ஷன்களுக்கு இந்திய அளவில் முதல்முறையாக பயோமெட்ரிக் சரி பார்க்கும் முறையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். டிஜிட்டல் பேமெண்ட்களில் நம்பிக்கை மற்றும் சௌகரியம் ஆகிய இரண்டும் எப்படி ஒன்றாக இணைய முடியும் என்பதை MinkasuPay உடன் கூட்டமைப்புக் கொண்டு நிரூபித்துள்ளோம்”, என்று M2P ஃபின்டெக் நிறுவனத்தின் கோ-ஃபவுண்டர் மதுசூதனன் கூறியுள்ளார்.
“சிறந்த மற்றும் மிகவும் பாதுகாப்பான பேமெண்ட் அனுபவத்தை எங்களுடைய கஸ்டமர்களுக்கு வழங்குவதே எங்களது நோக்கம். அதே சமயத்தில் அனைத்து பேமெண்ட் டிரான்ஸாக்ஷன்களுக்கும் டு ஃபேக்டர் ஆதன்டிகேஷன் செயல்முறை வழங்கப்படுகிறது. ஃபெடரல் வங்கி மற்றும் M2P உடன் கூட்டணி வைப்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. இதன் மூலமாக ஃபெடரல் வங்கி கார்டு கஸ்டமர்களுக்கு சிறந்த பேமெண்ட் அனுபவத்தை எங்களால் வழங்க முடியும்”, என்று MinkasuPay CEO அன்பு கவுண்டர் கூறியுள்ளார்.
வாடிக்கையாளர்களுக்கு இதன் மூலமாக பின்வரும் நன்மைகள் கிடைக்கும் என்று வங்கி ஒரு அறிகையில் குறிப்பிட்டு உள்ளது:
*இனி உங்களுடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது OTPகளை பயன்படுத்த தேவையில்லை. கைரேகை அல்லது ஃபேஸ் ID போதுமானது.
*3 வினாடிகளுக்குள் ஒரு டிரான்ஸாக்ஷனை விரைவாக உங்களால் செய்து முடிக்க முடியும். *ஒவ்வொரு டிரான்சாக்ஷனும் உங்களுடைய சாதனத்தால் தனித்துவமான முறையில் சரி பார்க்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழங்கப்படும்.
*கட்டுப்பாடு தொடர்ந்து கஸ்டமர்களிடம் உள்ளது, ஒரு டிரான்சாக்ஷன் செய்ய வேண்டுமா வேண்டாமா என்பதை அவர்களை முடிவு செய்யலாம்.
இந்த திட்டத்தை தற்போது ஃபெடரல் வங்கி குறிப்பிட்ட சில கூட்டாண்மை வியாபாரிகளோடு, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு ஹோல்டர்களுக்கு வழங்குகிறது. மேலும் இது படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
July 31, 2025 2:34 PM IST