இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற பிறகு, கேப்டன் ரோகித் சர்மா, ஆனந்த கண்ணீர் வடித்த காட்சி, சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழையின் காரணமாக ஆட்டம் சற்று தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 39 பந்துகளில் 2 சிக்சர்கள், 6 பவுண்டரிகளுடன் 57 ரன்களை குவித்தார். பிறகு சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் மூலம், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது. இந்த இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து, 16.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையும் படிக்க:
15வது ஓவரிலும் எப்படி ஸ்விங் ஆகும்? அவர் பந்த ஏதோ பண்றார்.. இந்திய பந்துவீச்சாளரை விமர்சித்த இன்சமாம்
இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், அந்த மகிழ்ச்சியுடன் இந்திய வீரர்கள் டிரஸ்ஸிங் ரூம் சென்றனர். முன்னதாக, பெவிலியன் சென்றிருந்த கேப்டன் ரோகித் சர்மா, அங்கிருந்த கேலரியில் ஆனந்த கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்தார். மேலும், வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் வந்தபோது, ரோகித் சர்மா தன்னை கட்டுப்படுத்த முடியாமல் உணர்ச்சிவசப்பட்டு, ஆனந்த கண்ணீர் வடித்தார்.
Rohit Sharma crying after the win, Virat Kohli cheering him up. #INDvENG pic.twitter.com/KlgyrCzvES
— S I D (@iMSIDPAK) June 27, 2024
அப்போது அங்கு வந்த விராட் கோலி, கேப்டனை ஆசுவாசப்படுத்த முயற்சித்தார். ஆனாலும் ரோகித் சர்மா தொடர்ந்து தேம்பி அழுது கொண்டிருந்தார். பின்னர் வந்த வீரர்கள் ரோகித் சர்மாவிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபடி உள்ளே சென்றனர்.
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான இறுதிப் போட்டி வரும் சனிக்கிழமை, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
